சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. கோலா உருண்டைகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, மீன் கோலா உருண்டை, மற்றும் வெஜிடபிள் கோலா உருண்டை மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது முள்ளங்கி கோலா உருண்டை. பொதுவாக முள்ளங்கியில் வரும் வாசத்தினால் அதனை யாரும் தொடுவதே இல்லை. ஆனால் ஒரு முறை இப்படி முள்ளங்கியைக் கொண்டு கோலா உருண்டை போல் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

குழந்தைகளை அதிகமாகக் கவரும் மொறு மொறு கோலா உருண்டை அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு. கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.

- Advertisement -

கோலா உருண்டை என்றாலே அது அசைவத்தில் மட்டுமே செய்யமுடியும் என்பதை முற்றிலும் மாற்றும் வகையில் ஒரு அற்புத சுவை கொண்ட சைவ கோலா உருண்டை இது.‌ முள்ளங்கி கொண்டு சுவையான கோலா உருண்டை எளிதில் செய்துவிடலாம். ஈஸி ரெசிபி. இதை சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம். சைவ கோலா உருண்டையை தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம். அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த முள்ளங்கி கோலா உருண்டையை செய்து பரிமாறினாள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏனென்றால் இந்த ரெசிபி அவ்வளவு சுவையாக இருக்கும்.

Print
No ratings yet

முள்ளங்கி கோலா உருண்டை | Radish Kola Urundai Recipe In Tamil

Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. கோலா உருண்டைகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, மீன் கோலா உருண்டை, மற்றும் வெஜிடபிள் கோலா உருண்டை மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது முள்ளங்கி கோலா உருண்டை. பொதுவாக முள்ளங்கியில் வரும் வாசத்தினால் அதனை யாரும் தொடுவதே இல்லை. ஆனால் ஒரு முறை இப்படி முள்ளங்கியைக் கொண்டு கோலா உருண்டை போல் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளை அதிகமாகக் கவரும் மொறு மொறு கோலா உருண்டை அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு. கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Radish Kola Urundai
Yield: 3 People
Calories: 64kcal

Equipment

  • 1 வாணலி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 முள்ளங்கி
  • 5 சின்ன வெங்காயம்
  • 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் முள்ளங்கியை நன்கு கழுவி விட்டு தோல் சீவி துருவி கொள்ளவும். பின்‌ அதில் உள்ள நீரை பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிழிந்து வைத்த முள்ளங்கி சேர்த்து 5 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, சோம்பு, வெங்காயம், பொட்டு கடலை, துருவிய தேங்காய், கிராம்பு, ஏலக்காய், பூண்டு,‌ இஞ்சி, கசகசா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் என அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ இதனை‌ ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் முள்ளங்கி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முள்ளங்கி கோலா உருண்டை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 64kcal | Carbohydrates: 3.7g | Protein: 6.8g | Sodium: 39mg | Potassium: 23mg | Fiber: 1.9g | Vitamin A: 14IU | Vitamin C: 17.8mg | Calcium: 25mg | Iron: 2.34mg

இதனையும் படியுங்கள் : பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு இப்படி செய்து கொடுத்தால்! ஒரு சட்டி சாதமும் நொடிப்பொழுதில் தீர்ந்து விடும்!