Home சைவம் ராகி கூழ் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

ராகி கூழ் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

ரொம்பவே சத்தான களி கூழ் எல்லாமே நம்ம சாப்பிட்டாதான் உடம்புக்கு நல்லது. அந்த வகையில் நிறைய சிறுதானியங்கள்ல நம்ம களி கூழ் எல்லாமே செஞ்சு சாப்பிட்டு இருப்போம். கோதுமை களி கோதுமை கூழ் ராகி கூழ் ராகி களி உளுந்து கஞ்சி உளுந்தங்களி அப்படின்னு நம்ம வீட்ல ஒரு பாரம்பரியமான முறையில் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னும் ஒரு சிலருக்கு எப்படி பாரம்பரியமான முறையில் எல்லாம் செய்றது அப்படின்னு தெரியாது. அவங்களுக்காகவே இப்ப நம்ம ரொம்ப ஆரோக்கியமான சத்தான ராகி கூழ் தான் பார்க்கப் போறோம்.

-விளம்பரம்-

பொதுவா சிறுதானியங்களை நம்ம உணவுல சேர்த்துக்கிட்டோம் அப்படின்னா நமக்கு பலவிதமான நோய்கள் வருவதை தடுக்க முடியும். அதுமட்டுமில்லாம சிறுதானியங்கள் சாப்பிடுவதால் உடல் எடையையும் குறைக்க முடியும். அந்த வகையில் இந்த ராகி கூழ் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிச்சிட்டு வந்தா கண்டிப்பா உடல் எடை குறைவதில் மாற்றம் தெரியும். இந்த ராகி கூழ் செய்வது ரொம்பவே ஈஸி தான் அரை மணி நேரத்துல செஞ்சு ஒரு கிளாஸ் குடிச்சா போதும் வயிறு ஃபுல் ஆகிவிடும்.

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே குடிக்கலாம் குறிப்பா குழந்தைகளுக்கு இப்போ இருந்தே நம்ம இதெல்லாம் கொடுத்து பழகினால் தான் அவங்க சாப்பிட்டு பழகுவாங்க. இதோட டேஸ்ட் ரொம்ப அருமையாக இருக்கும். பொதுவா இந்த கூழ் கலி எல்லாமே வீட்ல இருக்குற பெரியவங்களுக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நம்ம வீட்ல அடிக்கடி செய்யாததால் அவங்களும் சாப்பிடாமல் இப்ப நம்ம செய்யப் போற இந்த மெத்தட்ல நீங்க கலி கூல் எல்லாமே செஞ்சு கொடுங்க உங்க வீட்ல இருக்கிற பெரியவங்க ரொம்ப பேபி விரும்பி சாப்பிடுவாங்க.இப்ப வாங்க இந்த அருமையான சத்தான ராகி கூழ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

ராகி கூழ் | Ragi Koolu recipe In Tamil

பொதுவா சிறுதானியங்களை நம்ம உணவுல சேர்த்துக்கிட்டோம் அப்படின்னா நமக்கு பலவிதமான நோய்கள் வருவதை தடுக்க முடியும். அதுமட்டுமில்லாம சிறுதானியங்கள் சாப்பிடுவதால் உடல் எடையையும் குறைக்க முடியும். அந்த வகையில் இந்த ராகி கூழ் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிச்சிட்டு வந்தா கண்டிப்பா உடல் எடை குறைவதில் மாற்றம் தெரியும். இந்த ராகி கூழ் செய்வது ரொம்பவே ஈஸி தான் அரை மணி நேரத்துல செஞ்சு ஒரு கிளாஸ் குடிச்சா போதும் வயிறு ஃபுல் ஆகிவிடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Ragi Koolu
Calories: 261kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு
  • 3 கப் தண்ணீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 கப் தயிர்
  • 2 பச்சை மிளகாய்

செய்முறை

  • முதலில் ராகி மாவை தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
  • ஒரு 20 நிமிடங்கள் கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருந்தால் கொஞ்சம் ராகி மாவு கரைசல் கெட்டியாக ஆரம்பிக்கும்
  • அந்தப் பதத்தில் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கப் தயிரை சேர்த்து நன்கு கலந்து விடவும்
  • நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் சேர்த்து குடித்தால் சுவையான ராகி கூழ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 261kcal | Carbohydrates: 24g | Protein: 19g | Cholesterol: 1mg | Potassium: 111mg | Iron: 24mg

இதையும் படியுங்கள் : வீட்டில் ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறுன்னு இந்த தட்டையை உங்க வீட்டிலேயே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!