Home ஸ்வீட்ஸ் சுவையான ரசகுல்லா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும் சுவையில் இருக்கும்!

சுவையான ரசகுல்லா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும் சுவையில் இருக்கும்!

rasgulla

குழந்தைகளுக்கு ஸ்வீட் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ சட்டுனு ரசகுல்லா செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. கடைகளில் வாங்கும் ரசகுல்லா விட வீட்டிலேயே அதைவிட சுவையாகவும் செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

-விளம்பரம்-
rasgulla
Print
No ratings yet

ரசகுல்லா | Rasgulla Recipe In Tamil

குழந்தைகளுக்கு ஸ்வீட் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ சட்டுனு ரசகுல்லா செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. கடைகளில் வாங்கும் ரசகுல்லா விட வீட்டிலேயே அதைவிட சுவையாகவும் செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time21 minutes
Course: evening, sweets
Cuisine: Indian, TAMIL
Keyword: rasgulla, ரசகுல்லா
Yield: 4 people

Equipment

  • பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • ½ லிட்டர் பால்
  • 1 கப் சர்க்கரை
  • எலுமிச்சை சாறு கொஞ்சம்

செய்முறை

  • முதலில் பாலை கொதிக்க விடவும். பால் பொங்கியதும் அதில் கொஞ்சமாக எலுமிச்சை சாறு ஊற்றி தெரிந்ததும். அதனை ஒரு வெள்ளை துணியில் சேர்த்து நன்கு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • எலுமிச்சை சாறு ஊற்றியதால் புளிப்பு இருக்கும் அதனால் தண்ணீரில் மீண்டும் அலசி புழிந்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதனை ஒரு பௌலில் போட்டு சப்பாத்தி பதத்திற்கு நன்கு அழுத்தம் குடுத்து பிடித்து கொள்ளவும். பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்த கப்பில் 3 கப் தண்ணீர் ஊற்றி அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இதில் சேர்த்து 15 நிமிடம் வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.
  • இப்பொழுது சுவையான ரசகுலல்ல தயார்.