ரவை மாவில் பர்கர் ஸ்டைலில்  இட்லி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

தினமும் இட்லி, தோசை அப்படியே செய்து சாப்பிட்டு  பசங்களுக்கும் கொடுத்து போர் அடிச்சு போயிருக்கும் எல்லாரும் என்ன டெய்லி இட்லியும் தோசை தான் சாப்பாடு அப்படின்னு கேக்குற அளவுக்கு இருக்கிறவங்க இல்ல தோசை மாவும் இட்லி மாவும் இல்ல அப்படின்னு இருக்காங்க எல்லாம் இந்த டிபன் ட்ரை பண்ணி பாருங்க. ரொம்பவே சுவையா ரவையில பர்கர் ஸ்டைலில் மசாலா வைத்து எப்படி காலை உணவு செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த டிஷ் ரொம்ப சுலபமா செய்திடலாம் இதுக்கு ரொம்ப டைம் கூட எடுக்காது.

-விளம்பரம்-

எவ்வளவு ஈசியா செய்றமோ அந்த அளவுக்கு இதுல டேஸ்ட் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும். ஒரே மாதிரி இட்லி, தோசை , சப்பாத்தி பொங்கல், பூரி அப்படின்னு சாப்பிட்டு இருக்க உங்களுக்கு போர் அடிக்குதா? ரவா இல்ல உப்புமா செய்து சாப்பிட பிடிக்காதவங்களை நீங்க அப்போ அந்த ரவா வச்சு ரவா இட்லி பர்கர் ஸ்டைல்ல ஸ்டஃப் இட்லி இப்படி செய்தே பாருங்க.

- Advertisement -

 உங்களுக்கும் சுவை ரொம்பவே பிடிக்கும் உங்க குழந்தைகளும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரவா ஸ்டஃப்டு இட்லி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Print
4.67 from 3 votes

ரவா பர்கர் இட்லி | Rava Burger Idly Recipe In Tamil

ரொம்பவேசுவையா ரவையில பர்கர் ஸ்டைலில் மசாலா வைத்து எப்படி காலை உணவு செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த டிஷ் ரொம்ப சுலபமா செய்திடலாம் இதுக்கு ரொம்ப டைம் கூட எடுக்காது. எவ்வளவு ஈசியா செய்றமோ அந்த அளவுக்கு இதுல டேஸ்ட் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும். ஒரே மாதிரி இட்லி, தோசை , சப்பாத்தி பொங்கல், பூரி அப்படின்னு சாப்பிட்டு இருக்க உங்களுக்கு போர் அடிக்குதா? ரவா இல்ல உப்புமா செய்து சாப்பிட பிடிக்காதவங்களை நீங்க அப்போ அந்த ரவா வச்சு ரவா இட்லி பர்கர் ஸ்டைல்ல ஸ்டஃப் இட்லி இப்படி செய்தே பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Rava Burger Idly
Yield: 4
Calories: 247kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் ரவை
  • 1 கப் தயிர்
  • உப்பு தேவையானஅளவு
  • 2 கேரட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1/2 கப் பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி இவைகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து அதில் தயிர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின் வேக வைத்து எடுத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி இவைகளை ஒன்றாக சேர்த்து மசித்து கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்  சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி  கொத்தமல்லிதழைகளை தூவி இறக்கி வைக்கவும்.
     
  • பிறகு ஊற வைத்துள்ள ரவையில் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கிளறிவிட்டு இட்லி பாத்திரத்தில் இட்லிகள் போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
  • இட்லிகள் வெந்த பிறகு அவைகளை தனியாக எடுத்து ஒரு இட்லிக்கு மேல் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் மேல் இன்னொரு இட்லியை வைக்கவும்.
  • பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் நாம் செய்து வைத்துள்ள ரவா பர்கர் இட்லிகளை கடாயில் வைத்து இரண்டு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
  • இட்லியின் இரண்டு புறமும் சிவந்து வந்த பிறகு சூடாக எடுத்து பரிமாறினால் ரவா பர்கர் இட்லி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 247kcal | Carbohydrates: 47g | Protein: 32g | Sodium: 32mg | Potassium: 366mg | Fiber: 10.1g | Calcium: 6mg | Iron: 5mg