கனவா மீன் ஒரு கடல் உணவு வகைகளில் ஒன்று. , மேலும் கடம்பா மீன் என்றும் பலரும் அழைப்பர். கனவா மீன் பல்வேறு வகைகளில் சமைக்க முடியும். வறுத்த கனவா , கனவா மீன் குழம்பு, கனவா மீன் தொக்கு என்று கடல் உணவுகளில் கனவா மீன் ஒரு பிரபலமான உணவாகும்.மேலும் இது ஹோட்டல்,ரெஸ்டாரண்ட்களில் ஸ்டார்ட்டராக வழங்கப்படுகிறது. கனவா மீனை சாப்பிடுவதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப்படுகிறது.. அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.
இந்தியா மற்றும் இலங்கையின் கடலோரப் பகுதிகளான கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் கனவா மீன் உண்ணப்படுகிறது. ஸ்க்விட் , இது தமிழ்நாட்டில் கனவா அல்லது கடம்பா என்று அழைக்கப்படுகிறது.
மங்களூர் பாணி ரவா கனவா ஃப்ரை மீன் வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா மற்றும் ரவா பூசப்பட்ட மீன் ஃப்ரை. இது மிகவும் சுவையாக இருக்கும். மொறு மொறுவென்று இருக்கும் வித்தியாசமான ரவா கனவா ஃப்ரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரவா கனவா ஃப்ரை | Rava Squid Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் கடம்பா
- 2 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார்
- 4 தேக்கரண்டி ரவை
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 முட்டை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
- தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பெளலில் கணவாயுடன் கார்ன் ஃப்ளார், உப்பு மற்றும் தூள் வகைகளைச் சேர்த்து முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்து நன்றாகப் பிரட்டிக் கொள்ளவும்.
- இக் கலவையை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு ஒரு தட்டில் ரவையை பரப்பி, அதில் கணவாயை பிரட்டி எடுக்கவும்.
- வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கணவாயைப் போட்டு உடனே திருப்பிவிடவும்.
- 2 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். க்ரிஸ்ப்பியான ரவா கணவா ஃப்ரை ரெடி.