சுட சுட சாதத்துடன் தொட்டு சாப்பிட ருசியான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும். எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். ஆனால் இதில் பஜ்ஜி, பொரியல், வறுவல் என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும் மிகவும் சுவையாக இருக்கும். அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க. முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் பெப்பர் சாப்ஸ். இந்த சுவையான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் | Raw Banana Pepper Chops

வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும். எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். ஆனால் இதில் பஜ்ஜி, பொரியல், வறுவல் என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும் மிகவும் சுவையாக இருக்கும். அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க. முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் பெப்பர் சாப்ஸ். இந்த சுவையான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Yield: 4 people
Calories: 140kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 வாழைக்காய்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • கறிவேப்பிலை சிறிது

அரைப்பதற்கு…

  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 1/2 இன்ச் இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 3 டீஸ்பூன் மிளகு

செய்முறை

  • முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை நீள நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் வாழைக்காயைப் போட்டு பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் அந்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் வாழைக்காயைப் போட்டு 3 நிமிடம் பிரட்டி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமெனில் சிறிது உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.
  • அடுத்துஅதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெடி!!!

Nutrition

Serving: 100g | Calories: 140kcal | Carbohydrates: 32g | Protein: 3.5g | Fat: 1g | Sodium: 2.5mg | Potassium: 309mg
- Advertisement -