Advertisement
ஆன்மிகம்

மகா சிவராத்திரி கொண்டாட படுவதற்கான காரணம் தெரியுமா? சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்ன?

Advertisement

மகா சிவராத்திரி அன்று தான் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிவபெருமான் பிரம்ம ரூபத்தில் இருந்து லிங்கமாக மாறிய நாள் தான் சிவராத்திரி ஆக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் எட்டாம் தேதி வரக்கூடிய மாசி மாத சதுர்த்தசி நிலத்தன்று மகா சிவராத்திரி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சிவாயங்களிலும் சிவ வழிபாடு சிவபூஜைகள் சிவா அபிஷேகம் என சிவ பக்தர்களின் கூட்டங்கள் அலைமோதும்.

மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்வழித்து தூங்காமல் சிவபெருமானை முதல் கால பூஜையில் இருந்து நான்காம் கால பூஜை வரையில் பூஜை செய்து வழிபடுவார்கள். மார்க் எட்டாம் தேதி மாலை ஆரம்பிக்கின்ற முதல் கால பூஜை மார்ச் ஒன்பதாம் தேதி காலை நான்காம் கால பூஜை வரையில் நடக்கும். இந்த மகா சிவராத்திரி அன்று கோவில்களுக்கு சென்றும் இந்த பூஜைகளில் கலந்து கொள்ளலாம் அல்லது வீட்டில் இருந்தோம் நாம் சிவபெருமானை வழிபடலாம் ஆனால் வீட்டில் வழிபடும் போது சிவ பூஜை களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

சிவனை வழிபடுவதற்கு தேவையான பொருட்கள்

சிவனை வழிபடுவதற்கு பூஜைக்கு தேவையான பொருட்களான சிவலிங்கம் அல்லது சிவன் பார்வதியின் உருவம், வெள்ளை பூக்கள், மஞ்சள் பூக்கள், தேன், தயிர், பால், சந்தனம், கற்பூரம், பஞ்சாமிர்தம், ஊமத்தை மலர்கள், வில்வ இலைகள், அரச மர இலைகள், ஷமி இலைகள், நறுமண தூபம், ருத்ராட்சம், மல்லிகை பூக்கள், கரும்புச்சாறு, வெற்றிலை, அருகம்புல் இவை அனைத்தையும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிவபெருமானை பூஜை செய்ய வேண்டிய நேரம்

சிவபெருமான் பிரம்ம ரூபத்தில் இருந்து சிவலிங்கமாக மாறிய நேரமே நிஷித காலம் ஆகும். இந்த நிஷித காலத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்லது. இந்த நேரத்தில் அனைத்து கோவில்களிலும் லிங்கோத் பவ பூஜை செய்வார்கள். இந்த நிஷித காலம் ஆனது இந்த வருடம் ஒரு மணி நேரம் தாமதமாக அதாவது மார்ச் ஒன்பதாம் தேதி 12.07 மணி முதல் 12.56 வரையிலும் வருகிறது. இந்த நேரத்தில் நாம் சிவபூஜை செய்து வழிபட்டால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் திருமண தடை உள்ளவர்களுக்கு அந்த தடைகள் நீங்கும்.

Advertisement
இந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விரதம் இருந்தால் அது மிகவும் சிறப்பிற்குரியது. இந்த நேரத்தில் பார்வதி தேதியை வழிபடுவது நமக்கு பலவிதமான நன்மைகளையும் கொடுக்கும்.

மகாசிவராத்திரி அன்று செய்ய வேண்டியவைகள்

மகா சிவராத்திரி அன்று காலை விரைவாக எழுந்து கங்கா ஸ்நானம் செய்துவிட்டு சிவலிங்கத்தையும் கங்கை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். நீங்கள் விரதம் இருக்கப் போகிறீர்கள் என்றால் அதில் உறுதியாக இருக்க

Advertisement
வேண்டும்.அதன் பிறகு பஞ்சாமிருதத்தால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து வில்வ இலைகளை வைக்க வேண்டும். பூஜை ஆரம்பிக்கும் பொழுது அந்த நேரம் மங்களகரமான நேரம் ஆக இருக்க வேண்டும். மலர்கள் போட்டு தீபம் ஏற்றி நறுமண தூபம் காண்பித்து சிவபூஜை செய்ய வேண்டும். மலர்களையும் சிவலிங்கத்திற்கு அணிவித்து மனதார வழிபட வேண்டும். சிவபெருமானிற்கு பூஜை செய்யும் பொழுது ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை

மகா சிவராத்திரி என்று நீங்கள் சிவனுக்கு பூஜை செய்யும் பொழுது கருப்பு நிற ஆடையை அணியாமல் மஞ்சள் சிவப்பு பச்சை போன்ற நிறத்தால் ஆன ஆடைகளை அணியலாம். சிவபூஜைக்கு துளசி இலைகளை பயன்படுத்தக் கூடாது. சிவபெருமானுக்கு பூஜை செய்யும் பொழுது வெள்ளை சந்தனத்தால் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் மஞ்சள் குங்குமம் பயன்படுத்தக்கூடாது. உங்களுடைய ஜாதகப்படி உங்களுக்கு கால சர்ப்ப தோஷம் மற்றும் ராகு பாதகமாக இருந்தால் ஒரு ஜோடி வெள்ளி அல்லது செம்பினால் ஆன பாம்புகளை வாங்கி வைக்க வேண்டும். ருத்ராபிஷேகம் செய்வதால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கருதப்படுகிறது. கங்கை நீர் அல்லது கரும்புச்சாற்றால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பிற்குரியது.

இதனையும் படியுங்கள் : 2024 மகா சிவராத்திரி இன்று சிவயோகத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago