நமது வீட்டிற்கு நண்பர்கள் வந்தாலும், உறவினர்கள் வந்தாலும், தெரிந்தவர்கள் வந்தாலும், ஏன் சில சமயம் தெரியாதவர்கள் வந்தாலும் கூட அவர்களை மகிழ்ச்சியாக வரவேற்று உபசரிக்க வேண்டும் என்ற பண்பாட்டை தமிழர்கள் ஆண்டாண்டுகளாக கடைபிடித்து வருகிறோம். இருந்தாலும் வெகுளித்தனமாக இருக்கும் சிலர் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்க்க தெரியாது அனைவரையும் நம்புவார்கள் அனைவரிடத்திலும் மரியாதையுடன் மகிழ்ச்சியுடனும் பேசுவார்கள். ஆனால் அப்படி உங்கள் வீட்டிற்கு வரும் நபர்கள் மனதில் என்னென்ன விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று நமக்கு தெரியாது அல்லவா.
இனி இந்த தவறை செய்யாதீர்கள்
அதனால் உங்கள் வீட்டிற்கு வரும் நண்பர்களையும், உறவினர்களையும், தெரிந்தவர்களையும், அன்போடு உபசரித்து வரவேற்க வேண்டும் ஆனால் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக கூறாதீர்கள் சில விஷயங்களை அவர்களிடம் இலை மறை காய் மறையாக தான் பேச வேண்டும். உதாரணமாக உங்களின் குடும்ப வருமானம், உங்களின் குடும்ப சூழ்நிலை நீங்கள் எவ்வாறு குடும்பத்தை நடத்துகிறீர்கள் என இது போன்ற விஷயங்களை யாரிடமும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளாதீர்கள் அது நல்லது இல்லை.
ஏன் உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் உங்களுடைய வீட்டு சூழ்நிலையைப் பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் நீங்களும் வெகுளித்தனமாக அனைத்தையும் கூறிவிட்டால் அவர்கள் மனதில் எந்த குறையும் இல்லாதவர்களாக உங்களைப் போல் வெள்ளை மனதாக இருந்தாரல். அப்பொழுது எந்த பாதிப்பும் இல்லை ஆனால் இந்த பிரச்சனை எங்கு தொடங்குகிறது என்றால் அவர்கள் நீங்கள் வாழும் வாழ்க்கை பார்த்தும், உங்களையும் பார்த்தும் பொறாமை கொண்டார்கள் என்றாலும், வஞ்சத்துடன் உங்களிடம் பழகுபவர்கள் என்றாலும் அவர்கள் மனதில் உங்களைப் பற்றி கரிந்து கொண்டே இருக்கும் பொழுது அது உங்கள் வீட்டில் பிரச்சனையாகவும், சண்டை சச்சரவுகளான பாதிப்பாக பிரதிபலிக்கும்.
நம்க்கு நம் குடும்பம் தான் முக்கியம்
ஆனால் உங்கள் மனதில் இப்போது சில கேள்விகள் எழும் இப்படி வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் பற்றி தவறாக நினைப்பது சரியாக இருக்குமா? ஆனால் நமக்கு நம் குடும்பம் தானே முக்கியம் அதனால் அவர்கள் உங்கள் குடும்ப ரகசியங்கள் பற்றிய கேள்விகளை கேட்கும் பொழுது பொதுவாக பதில் அளித்து அந்த உறையை அதுதுடன் முடித்து கொள்ளுங்கள். மீண்டும் அவர்கள் தொடரும் பொழுது உங்களது பேச்சை மாற்றி வேறு எதையாவது பேசத் தொடங்குங்கள். ஒருவருக்கு எது தெரிய வேண்டுமோ அதை மட்டும் அவரிடம் தெரியப்படுத்திக் கொள்ளுங்கள் அதுவே சரியானதாகும்.
இதற்கு பரிகாரம்
கடைசியாக ஒரு விஷயமும் உள்ளது உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளி, நண்பர்கள், உறவுக்காரர்கள், தெரிந்தவர்களில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பது நமக்கு தெரியாது ஆனால் அவர்களின் எவரேனும் ஒருவர் பொறாமை குணத்துடனும் அல்லது நமது வீட்டிற்கு கண் திருஷ்டியை சேரப்பவர்களாக இருந்தால் அதை நம்மை பாதிக்காத வண்ணம் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? நாம் வீட்டிற்கு வந்தவர்கள் கிளம்பி சென்றவுடன் நமது வீட்டில் வரவேற்பு அறையில் ஒரு சூடகம் ஏற்றலாம் அல்லது அகல் விளக்கு ஏற்றி வைக்கலாம் இப்படி நாம் செய்யும்பொழுது அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றல் இந்த தீபத்தினால் கரைந்து விடும். இப்படி நாம் செய்தால் நம் வீட்டில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நாம் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழலாம்.