Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் ஆன்மீகவாதிகள் தியானம் செய்வதற்கு முக்கியமான காரணங்களும் , பலன்களும்!

ஆன்மீகவாதிகள் தியானம் செய்வதற்கு முக்கியமான காரணங்களும் , பலன்களும்!

நம்முடைய மனதை அலைபாய விடாமல் தடுத்து ஒரு நிலை படுத்த பயன்படுவது தான் தியானம். தியானம் செய்வது நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்துவது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கும் நினைவாற்றல் அதிகரிப்பதற்கும் சமநிலையை இழக்காமல் இருக்கவும் இந்த தியானம் உதவி செய்யும். அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் தியானம் செய்வதால் பலவிதமான நன்மைகள் நடக்கும். அந்த காலத்தில் இருந்த முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் எல்லோரும் பல ஆண்டுகள் தவமிருந்துதாக கேள்விப்பட்டிருப்போம் இப்பொழுதும் கூட தங்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பலர் வீட்டிலும் தியானம் செய்வதை வழக்கமாக தான் வைத்துள்ளார்கள். மன அழுத்தத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையில் இருப்பவர்களையும் ஆன்மீகவாதிகளும் மருத்துவர்களும் தியானம் செய்ய சொல்லி தான் சொல்கிறார்கள். இந்த தியானம் செய்வதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

-விளம்பரம்-

கட்டுப்பாடு

தியானம் செய்வதால் மனம் உடல் எண்ணம் போன்ற அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அதனால் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பெற முடியும்ஆன்மீக வளர்ச்சிதியானம் செய்வது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. தங்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்துவதற்கும் உயர்ந்த நிலையை அடைவதற்கும் தியானம் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

சமநிலை ஏற்படுதல்

தியானம் செய்வதால் ஆன்மா உடல் மனம் மூன்றும் சமநிலைப்படுத்தப்படும். முழுமையான வாழ்க்கையை அடைய முடியும் வாழ்க்கையின் அனைத்து செயல்களும் உயர்ந்த தெய்வீக சக்தியுடன் தொடர்புடையது எனவே தியானம் செய்வது மிகவும் நல்லது.புரிதல் ஏற்படும்கவனச் சிதறல்கள் தியானம் செய்வதால் கட்டுப்படும். இதனால் ஒருவருடைய நிலை சீரமைக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை நோக்கம் மற்றும் வாழ்க்கையில் நடக்கின்ற செயல்களுக்கான நோக்கம் அனைத்தும் புரியும். இது நம்மை முழுமையான ஆன்மீக பாதையில் அழைத்துச் செல்லும்.

தெய்வீக உறவு

தியானம் செய்வது தெய்வீகத்துடனும் பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்ந்த உறவை ஏற்படுத்தும். இந்த தெய்வீக சக்தி நம்மை வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல உதவும்.மனத்தூய்மை ஏற்படுதல்மனதில் உள்ள தீய எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி மனதை தெளிவுபடுத்த தேவையற்ற எண்ணங்களை நீக்க தியானம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

விழிப்புணர்வு

தியானம் தொடர்ந்து செய்து வந்தால் ஒருவருடைய எண்ணங்கள் அனைத்தும் தெளிவு பெற்று உள்ளார்ந்த உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தையும் நாம் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். ஆன்மீகத்தில் நாம் யார் என்று உணர்வை நமக்கு உணர்த்தவும் உதவும்.

-விளம்பரம்-

மன அமைதி

இவை அனைத்திற்கும் மேலாக தியானம் செய்வது நம் மனதிற்கு அமைதியை தருகிறது. நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் சவால்களுக்கு இடையே தியானம் செய்து வந்தால் நம்முடைய மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். இதுதான் நமக்கு மிகவும் தேவையான ஒன்று.

இதனையும் படியுங்கள் : காகம் உங்கள் வீட்டு முன் இப்படி செய்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?