Home ஆன்மிகம் காகம் உங்கள் வீட்டு முன் இப்படி செய்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று...

காகம் உங்கள் வீட்டு முன் இப்படி செய்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

மற்ற பறவைகளை போல நாம் காகத்தை பார்க்க மாட்டோம். காகம் நம் முன்னோர்களுடனும் வாஸ்து பிரகாரத்துடனும் தொடர்புடைய ஒரு பறவை என்று சொல்லலாம். பொதுவாக காகம் நம் வீட்டின் முன் வந்து கரைந்தாலோ வீட்டிற்குள் வந்து கரைந்தாலோ அதற்கு ஒரு சில அர்த்தங்கள் உண்டு என்பார்கள். ஒரு சில சமயங்களில் காகம் கரைவது நல்லது என்றும் சில சமயங்களில் கெட்டது என்றும் பலர் கூற கேட்டிருப்போம். எனவே காகம் கரைவது நம் வீட்டின் முன் வருவது போன்றவைகளுக்கான அர்த்தங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

சாஸ்திரங்களின் படி விலங்கு அல்லது பறவை எதுவாக இருந்தாலும் வீட்டிற்குள் வருவது சில சமயங்களில் நல்ல அறிகுறியையும் சில சமயங்களில் கெட்ட அறிகுறிகளையும் குறிக்கும். அந்த வகையில் காகம் நம் வீட்டிற்குள் வந்து கரைவது நல்ல மற்றும் கெட்ட அறிகுறிகளை நமக்கு உணர்த்துவதாக இருக்கும்.

காகத்தின் உரத்த குரல்

பொதுவாக நம் முன்னோர்களும் சில சாஸ்திரங்களும் சொல்லியது படி நாம் செய்யக் கூடாது என்று சொல்லும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு அந்த வகையில் காகம் நம் வீட்டிற்குள் வந்து கரைவதால் உண்மையிலேயே காகம் கரைவதை பொருத்து சில நல்ல விஷயங்களும் நடக்கும் தீய விஷயங்களும் நடக்கும். நாம் நீண்ட தூர பயணத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது காகம் வந்து ஒரு உரத்த அலறல் விட்டால் அந்த பயணம் நமக்கு வெற்றிகரமாக அமையப் போகிறது என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையிலும் சில வெற்றிகள் நமக்கு வந்து சேர போகிறது என்று அர்த்தம்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வருகை

யாரையாவது சந்திக்க போகும்போது சுப காரியங்களுக்காக பேசிக் கொண்டிருக்கும் போதும் மேற்கு திசையை நோக்கி காக்கையின் அலறல் சத்தம் கேட்டால் நாம் திட்டம் தீட்டிய படி அனைத்தும் நன்றாக நடக்கப் போகிறது என்று அர்த்தம். காலை எழுந்தவுடன் காகம் நம் வீட்டின் முன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பறந்தால் நம் வீட்டிற்கு யாராவது நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம்.

முன்னோர்கள் கோபம்

ஒருவேளை உங்கள் வீட்டின் முன் நிறைய காகங்கள் ஒன்று கூடி கரைகின்றன என்றால் அது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது என்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை என்பதை குறிக்கும். உங்கள் வீட்டின் முன் காகம் தெற்கு பக்கமாக அமர்ந்திருந்தால் உங்களுடைய முன்னோர்கள் உங்கள் மேல் கோபமாக இருக்கிறார்கள் என்பதே அறிகுறி. பொதுவாக கோடை காலத்தில் நம் வீட்டின் முன்னோ அல்லது வாழ்க்கையிலும் பறவைகளுக்காக தண்ணீர் வைப்பது ஒரு மிகச்சிறந்த பழக்கமாகும் அப்படி நீங்கள் தண்ணீர் வைக்கும் பொழுது அதனை காக்கை வந்த அருந்தினால் நீங்கள் கூடிய விரைவில் பணக்காரர்களாக போகிறீர்கள் என்று அர்த்தம்.

-விளம்பரம்-

காகம் உங்கள் வீட்டில் உள்ள ரொட்டி அல்லது மற்ற உணவு பொருட்களை சாப்பிட்டால் அது உங்களுடைய முன்னோர்களை வந்து சாப்பிட்டது போல அர்த்தம் அது முன்னோர்கள் உங்கள் வாழ்க்கையுடன் இணைந்து இருக்கிறார்கள் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்பதை குறிக்கும்.

இரண்டு காகங்கள் உங்கள் வீட்டின் முன் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டால் உங்கள் வீட்டில் திருமண சுப காரியம் நடக்கப்போகிறது அல்லது உங்களின் நெருக்கமானவர்களின் திருமணம் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

இதனையும் படியுங்கள் : வெள்ளிகிழமை ஆண் குழந்தை பிறந்தால் தந்தைக்கு இளம் வயதில் மரணமா ? முழுவிபரம் உள்ளே!

-விளம்பரம்-