நம் முன்னோர்கள் ஆன்மீகம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அறிவியல் என்று எடுத்துக் கொண்டாலும் சரி அதற்கான தெளிவான விளக்கங்களை கூறாமல் பொதுவாக பழமொழி போல் சில வாக்கியங்கள் கூறி விடுவார்கள். ஆனால் நாம் அதற்கான முழு பொருளை பற்றி அறிந்து கொள்ளாமல். அவர்கள் கூறிய பழமொழின் அர்த்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாம் இன்றளவும் அதை தவறாக கூறிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக “வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தன் தந்தையின் இறுதி சடங்கிற்கு உதவ மாட்டார்” என்று ஒரு கூற்று இருக்கிறது ஆனால் இன்றைக்கும் இதை அனைவரும் தவறாகத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்து விட்டால் தந்தையின் இறுதி சடங்கிற்கு உதவ மாட்டார் என்பதை பலரும் தந்தை மரணிப்பதற்கு முன்பாகவே மகன் மரணித்து விடுவான் என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள். இதற்கு அர்த்தம் இது இல்லை ஆம் வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்து விட்டாள் அவரது தந்தை மரணத்தின் பொழுது அவருடைய மகனின் பணம் இறுதி சடங்கிற்கு உதவாது என்பது தான் அதன் பொருள். ஆம் இப்படி வெள்ளிக்கிழமையில் பிறக்கும் ஆண் குழந்தைகள் அவர்கள் தந்தையின் மரணத்தின் போது சம்பாதிக்கும் சூழ்நிலை இருக்காது அவர்களிடம் போதிய பணமும் இருக்காது என்பதாகும்.
அப்படி என்றால் வெள்ளிக்கிழமை அன்று பிறந்த குழந்தைகளுக்கான அனைவருக்கும் இப்படி நடக்குமா என்று கேட்டால் அதுவும் கிடையாது ஆம் வெள்ளிக்கிழமை அன்று நவமி திதி அன்று பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு இவ்வாறு நடக்கும். ஆனால் நம் ஆன்மீகத்தில் அனைத்துக்கும் ஒரு தீர்வு இருக்கும் அதன்படி இதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது. வெள்ளிக்கிழமை அதுவும் நவமி திதி ஆண் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தையின் தாயார் ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் இதற்கு ஒரு தீர்வு காணலாம். அதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் தொகுப்பில் தெளிவாகவும் காணலாம் வாருங்கள்.
வெள்ளிக்கிழமை நவமி திதியில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தையின் தந்தைக்கு ஆயுட்காலம் மிகக் குறைவு என்பதால் அந்த குழந்தையின் தாய் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்காக பிறந்த குழந்தையை தங்களின் குலதெய்வ கோவில் அல்லது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கோவிலின் பெயரில் எழுதிக் கொடுத்து. இந்த குழந்தை இனி உன் பொறுப்பு நீதான் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குழந்தையை கொண்டு வந்து விடுங்கள். பின்பு அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி திருமண வயது வரும் வரை பிற கோவில்களுக்கு சென்று குழந்தைக்கு அர்ச்சனை செய்யும் போதும் நீங்கள் எழுதிக் கொடுத்த கோவிலின் பெயராலேயே அர்ச்சனை செய்ய வேண்டும்.
பின் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி திருமணம் முடிக்கும் வயது வந்தவுடன் நீங்கள் எந்த கோவிலுக்கு எழுதி கொடுத்தீர்களோ அந்த கோவிலுக்கு சென்று இத்தனை நாள் நீ பாதுகாத்து வளர்த்து வந்த குழந்தையை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்று எழுதிக் கொடுத்து வந்து விடுங்கள். அதனால் அந்த குழந்தையின் தாய் தீர்க்க சுமங்கலியாக வாழலாம். இது எதுவுமே செய்ய முடியாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த குழந்தையை மனதார இந்த குழந்தையை வளர்க்க வேண்டியது உங்களின் பொறுப்பு என்று உங்கள் குலதெய்வத்தை அல்லது திருச்செந்தூர் முருகனையோ வேண்டிக் கொண்டு உங்கள் குலதெய்வம் அல்லது திருசெந்தூர் முருகப்பெருமானின் பெயரை வைத்து குழந்தைக்கு வளர்த்து வந்தால். அந்த குழந்தையின் தாயார் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.