தீபாவளி ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா செய்முறை எளிமையாக செய்யலாலாம்! மிஸ் பண்ணாம செஞ்சி பாருங்க!

- Advertisement -

இந்த தீபாவளிக்கு நிறைய விதவிதமான பலகாரங்களை செய்து சாப்பிட இருப்போம். அதுல மிகவும் முக்கியமான ஒரு தீபாவளி பலகாரம் அப்படின்னு சொன்னா அது ஓலை பக்கோடா. ரிப்பன்  பக்கோடாக்கு ரிப்பன் முறுக்கு, ஓலை பகோடா நிறைய பேர்ல சொல்லுவாங்க. உங்க ஊர்ல என்ன பேர்ல சொல்லுவாங்களோ அந்த பேர வச்சு நீங்க சொல்லிக்கலாம் .

-விளம்பரம்-

இப்போ நம்ம இந்த ரிப்பன் பக்கோடா நல்ல மொறு மொறுன்னு சுவையா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். இந்த ரிப்பன் பக்கோடாக்கள் எல்லாம் வந்துட்டு ஒரு டைம்ல கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிடற மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அதெல்லாம் வீடுகள்ல செய்ய ஆரம்பித்தார்கள் அப்போ நமக்கு இதெல்லாம் புது விஷயமாக இருக்கும் 80கள் 90களில் இந்த பலகாரம் செய்றாங்க அப்படின்னாலே அது  நம்ம வீட்ல புதுசா ஒரு பலகாரம் செய்து இருக்காங்க அப்படிங்கிற அளவுக்கு இருக்கும்.

- Advertisement -

ஆனால் வழக்கமான ஒரு பலகாரமா மாறிடுச்சு இப்ப இந்த ரிப்பன் பக்கோடாவை எப்படி சுவையாக செய்றது அப்படின்றதுக்கு நிறைய சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் இருக்கு. இந்த ரிப்பன் பக்கோடா மொறு மொறுன்னு வர்றதுக்காக இந்த அரிசி மாவு கடலைமாவும் எந்த அளவுக்கு சேர்க்கணும் அப்படிங்கறதுல தான் இருக்கு விஷயமே அப்படி தான் அது நல்ல டேஸ்ட்டா வரும்.

இல்லாம அளவுகளை மாற்றி சேர்த்துடோம் அப்படின்னா அது வந்து கடிக்குறதுக்கு ரொம்ப கஷ்டப்படுற அளவுக்கு நல்ல ஸ்ட்ராங்கா ஆயிடும். அதனால நசரியான அளவுகளில் பொருட்களை எல்லாம் சேர்த்து இந்த ரிப்பன் பக்கோடா எப்படி மொறு மொறுன்னு செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

-விளம்பரம்-

Print
No ratings yet

ரிப்பன் பக்கோடா | Ribbon Pakoda Recipe In Tamil

நம்ம இந்த ரிப்பன் பக்கோடா நல்ல மொறு மொறுன்னு சுவையா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். இந்த ரிப்பன் பக்கோடாக்கள் எல்லாம் வந்துட்டு ஒரு டைம்ல கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிடற மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அதெல்லாம் வீடுகள்ல செய்ய ஆரம்பித்தார்கள் அப்போ நமக்கு இதெல்லாம் புது விஷயமாக இருக்கும் 80கள் 90களில் இந்த பலகாரம் செய்றாங்க அப்படின்னாலே அது  நம்மவீட்ல புதுசா ஒரு பலகாரம் செய்து இருக்காங்க அப்படிங்கிற அளவுக்கு இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Ribbon Pakkoda
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசிமாவு
  • 12 கப் கடலைமாவு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 சிட்டிகை பெருங்காயதூள்
  • 1 ஸ்பூன் எள் அல்லது சீரகம் அல்லது ஓமம்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த அரிசி மாவோடு கடலை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு மிளகாய் தோலை சேர்த்து கலந்து கொண்டு அதில் உப்பு பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதில் லேசான சூட்டில் உள்ள எண்ணெயை சேர்த்து மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு முறுக்கு உரலில் வத்தல் பிழியும் அச்சை போட்டுக் கொண்டு பிசைந்து வைத்துள்ள ரிப்பன் பக்கோடா மாவை முறுக்கு உரலில் சேர்த்து கொள்ளவும்.
  • பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விடவும். என்னை காய்ந்ததும் உரலை எடுத்து நேரடியாக அப்படியே எண்ணெயில் பக்கோடா ஒரு இரண்டு மூன்று சுத்துக்கள் சுற்றி பிழியவும்.
  •  5 நிமிடம் வெந்த பிறகு திருப்பி போடவும் இரண்டு புறமும் நன்றாக வெந்து எண்ணெயில் சலசலப்பு வருவது அடங்கிய பிறகு எடுத்து லேசாக உடைத்து விட்டால் சுவையான மொறு மொறு ரிப்பன் பக்கோடா தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g