- Advertisement -
எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயசம் போல் இல்லாமல் இந்த அரிசி பாயசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இருந்தாலும் கால்யாண வீடுகளில் வைக்கும் அரிசி பாயசம் சுவைக்கு வருமா அதனால் இன்று கல்யாண வீட்டு சுவையில் அரிசி பாயசம் செய்து பார்க்க போகிறோம்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய் லட்டு செய்வது எப்படி ? தீபாவளி ஸபெஷல்!
- Advertisement -
சாப்பிட சாப்பிட திகட்டாத இந்த அரிசி பாயசம் ஒருமுறை நீங்களும் செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கண்டிப்பாக செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு அலாதியான சுவையுள்ள இந்த அரிசி பாயசத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முளை விளக்கம் என் கீழே கொடுக்கபட்டுள்ளதை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள் அட்டகாசமான் சுவையில் இருக்கும்.
அரிசி பாயசம் | Rice Payasam Recipe In Tamil
எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயசம் போல் இல்லாமல் இந்த அரிசி பாயசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இருந்தாலும் கால்யாண வீடுகளில் வைக்கும் அரிசி பாயசம் சுவைக்கு வருமா அதனால் இன்று கல்யாண வீட்டு சுவையில் அரிசி பாயசம் செய்து பார்க்க போகிறோம் சாப்பிட சாப்பிட திகட்டாத இந்த அரிசி பாயசம் ஒருமுறை நீங்களும் செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கண்டிப்பாக செய்ய சொல்லி கேட்பார்கள்.
Yield: 4 people
Calories: 130kcal
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் உடைத்த பச்சரிசி
- 200 கிராம் வெல்லம்
- 1 கப் தேங்காய்ப்பால்
- நெய் சிறிது
- முந்திரி, கிஸ்மிஸ் சிறிது
- ஏலக்காய் தூள் சிறிது
செய்முறை
- முதலில் உடைத்த பச்சரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு வெந்த அரிசியுடன் வெல்லம் போட்டு அது கரைந்தவுடன் ஏலக்காய் தூள், சேர்த்து நன்றாக கிளறவும்.
- அடுத்து நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், போட்டு கடைசில் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொத்தி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
- சூப்பரான அரிசிப்பாயாசம் ரெடி.
- தேங்காய் பாலுக்குப் பதிலாக துருவிய தேங்காயையும் போடலாம்.
Nutrition
Calories: 130kcal | Carbohydrates: 28g | Protein: 2.7g | Fat: 0.3g | Saturated Fat: 0.1g | Sodium: 1mg | Potassium: 35mg | Fiber: 0.4g | Sugar: 0.1g