அடுத்தமுறை கடையில் பீர்க்கங்காய் வாங்கினால் இப்படி முட்டை பொரியல் செஞ்சு பாருங்க சாப்பாடு ஃபுல்லா காலி ஆகிவிடும்!

- Advertisement -

பொதுவான பீர்க்கங்காய் ல கூட்டு பொரியல் எல்லாமே செய்வோம். ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த பீர்க்கங்காய் கூட்டு பொரியல் எல்லாமே பிடிக்கும் ஒரு சிலர் சுத்தமா இத சாப்பிடவே மாட்டாங்க. இன்னும் ஒரு சிலர் இந்த பீர்க்கங்காய் உங்க வீட்டுல வாங்கி சமைக்கவே மாட்டாங்க காரணம் ஒரு சில நேரம் இந்த பீர்க்கங்காய் கசப்பு எடுத்துடும் அதனால பெரும்பாலும் யாரும் இத வாங்கி சமைக்க மாட்டாங்க. ஆனா இந்த பீர்க்கங்காய் வாங்கி சும்மா கடுகு பச்சை மிளகாய் போட்டு தாளிச்சு எண்ணெய் பீர்க்கங்காய் மாதிரி வைத்து சாப்பிட்டாலே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

இதுல நம்ம பருப்பு எல்லாம் போட்டு பீர்க்கங்காய் கூட்டு வச்சா இன்னும் ரொம்ப டேஸ்டா இருக்கும். அந்த வகையில் நம்ம இன்னைக்கு முட்டையும் பீர்க்கங்காயும் சேர்த்து ஒரு சூப்பரான பொரியல் செய்ய போறோம். ஒருவேளை உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கு இந்த பீர்க்கங்காய் பிடிக்கல அப்படின்னா முட்டை பொரியல் அப்படின்னு சொல்லி ஏமாத்தி கூட நீங்க இந்த பீர்க்கங்காய் முட்டை பொரியல் சாப்பிட கொடுக்கலாம் கண்டிப்பா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும் அதனால குழந்தைகளும் விரும்பி முட்டை பொரியல் அப்படின்னு நினைச்சு சாப்பிட்டு முடிச்சிடுவாங்க.

- Advertisement -

உங்க வீட்ல ஏதாவது புளி குழம்பு காரக்குழம்பு அப்படின்னு வெச்சா கண்டிப்பா இந்த பீர்க்கங்காய் முட்டை பொரியல் செஞ்சு பாருங்க உங்களுக்கு டேஸ்ட் ரொம்பவே பிடிக்கும். காரக்குழம்புக்கு சைடிஷா வச்சு சாப்பிட இந்த பொரியல் சூப்பரான காம்பினேஷனா இருக்கும். எப்பவும் முறை மாதிரியா கேரட் பொரியல் பீன்ஸ் பொரியல் செய்யாம ஒரு தடவை டிஃபரண்டா இந்த பொரியல் செஞ்சு பாருங்க அப்புறம் அடிக்கடி உங்க வீட்ல இந்த பொரியல் நீங்க செஞ்சு சாப்பிடுவீங்க. இப்ப வாங்க இந்த சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

பீர்க்கங்காய் முட்டை பொரியல் | Ridge gourd Egg fry

பொதுவான பீர்க்கங்காய் ல கூட்டு பொரியல் எல்லாமே செய்வோம். ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த பீர்க்கங்காய் கூட்டு பொரியல் எல்லாமே பிடிக்கும் ஒரு சிலர் சுத்தமா இத சாப்பிடவே மாட்டாங்க. இன்னும் ஒரு சிலர் இந்த பீர்க்கங்காய் உங்க வீட்டுல வாங்கி சமைக்கவே மாட்டாங்க காரணம் ஒரு சில நேரம் இந்த பீர்க்கங்காய் கசப்பு எடுத்துடும் அதனால பெரும்பாலும் யாரும் இத வாங்கி சமைக்க மாட்டாங்க. எப்பவும் முறை மாதிரியா கேரட் பொரியல் பீன்ஸ் பொரியல் செய்யாம ஒரு தடவை டிஃபரண்டா இந்த பொரியல் செஞ்சு பாருங்க அப்புறம் அடிக்கடி உங்க வீட்ல இந்த பொரியல் நீங்க செஞ்சு சாப்பிடுவீங்க. இப்ப வாங்க இந்த சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ridge gourd Egg fry
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பீர்க்கங்காய்
  • 4 முட்டை
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • பீர்க்கங்காயை தோல் நீக்கி வெட்டி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
     
  • பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்
  • வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
     
  • பீர்க்கங்காய் முக்கால் வேக்காடு வெந்ததும் முட்டையை உடைத்து சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 235g | Sodium: 216mg | Potassium: 21mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட பக்காவான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!