அடிக்கிற வெயிலுக்கு தாகத்தை தணிக்க ரூஅஃப்சா சர்பத் இப்படி செய்து! இதன் சுவையே தனி சுவை!!

- Advertisement -

பழங்கள் நிறைந்த ரூஅஃப்சா சர்பத் ,  சூடான நாளில் ஒரு சரியான பானமாகும். இது பாரம்பரியமான சுவை, மணம் மற்றும் நிறம் ஆகிய உருவாக்கம் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையற்றவை. இது மூலிகைப் பொருட்களின் குளிர்ச்சியான கலவையாகும். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கலவை, ரூஹ்அஃப்சா ஒரு தாகத்தைத் தணிக்கும் குளிர்ச்சியைத் தவிர, இது ஊட்டச்சத்து மற்றும் உடலின் நீரின் அளவை சரிசெய்வதுடன் பராமரிக்கிறது. வாங்க நாமும் இந்த ரூஅஃப்சா சர்பத் செய்முறையை கற்றுக் கொள்வோம். 

-விளம்பரம்-

- Advertisement -
Print
No ratings yet

ரூஅஃப்சா சர்பத் | Roohafza Sharbat In Tamil

ரூஅஃப்சா சர்பத் : ஒரு தாகத்தைத் தணிக்கும் குளிர்ச்சியைத் தவிர, இது ஊட்டச்சத்து மற்றும் உடலின் நீரின் அளவை சரிசெய்வதுடன் பராமரிக்கிறது. வாங்க நாமும் இந்த ரூஅஃப்சா சர்பத் செய்முறையை கற்றுக் கொள்வோம். 
Course: Dessert
Cuisine: tamilnadu
Keyword: Roohafza Sharbat
Yield: 4
Calories: 60kcal

தேவையான பொருட்கள்

  • 4 டேபிள்ஸ்பூன் ரூஹ் அப்சா சர்பத்
  • 2 டேபிள்ஸ்பூன் சப்ஜா
  • ஐஸ் கியூஃப் தேவைக்கு
  • சீனி தேவைக்கு
  • 1 எலுமிச்சை பழம்
  • தண்ணீர் தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் எலுமிச்சையை பிழிந்து வைத்து கொள்ளவும்.அத்துடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு,சுவைக்கு ஏற்ப சீனியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் ரூஹ் அப்சா சர்பத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.சர்பத் கட்டியாக இருப்பதால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  • சப்ஜா விதையை 10 நிமிடம் ஊற வைத்தால் அது இரண்டு மடங்காக வந்து விடும்.இப்போது ஊற வைத்துள்ள சப்ஜா விதையை அத்துடன் கலந்து, ஐஸ் கியூப் போட்டு நன்கு கலந்து விடவும்.
  • பிறகு ஃப்ரிஜ்ஜில் வைத்து நோன்பு திறக்கும் நேரத்திலும்,கோடை காலத்திலும் குடிப்பதற்க்கு சுலபமாக செய்யக்கூடிய ஒரு சர்பத் தான்…

Nutrition

Serving: 250g | Calories: 60kcal | Carbohydrates: 220g | Protein: 234g