Home ஆன்மீகம் வீட்டில் வறுமையே வராத அளவிற்கு பணம் சேர வேண்டுமா ? ஒரு கைப்பிடி உப்பு இருந்தால்...

வீட்டில் வறுமையே வராத அளவிற்கு பணம் சேர வேண்டுமா ? ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் மட்டும் போதும்!

ஒருவர் வீட்டின் வறுமையும் பணத்தட்டுப்பாடு பணக்கஷ்டம் என அனைத்தும் அவரவர் எடுக்க முடிவை பொறுத்து தான் என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி சில கண்ணுக்கு தெரியாத சக்திகளால் நம் வீட்டில் வறுமை தலைவிரித்து தாண்டவம் ஆடும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமாம். ஆம், நாம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும், நல்ல சக்தியும் கூட நமது வீட்டின் பொருளாதார நிலையை தீர்மானித்து விடும். ஆகையால் உங்கள் வீட்டில் வறுமையை போக்கி பணவரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

kadal uppu – Amuthini Naturals

குறையாத செல்வம்

உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடும் இடத்தில் அல்லது சாப்பிடும் டேபிளில்லும் உப்பு வைத்திருப்பது உங்கள் வீட்டின் செல்வ செழிப்பை அதிகரித்து. வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வம் கிடைக்க வழிவகுக்குமாம்.

வீட்டு சுத்தம்

நீங்கள் வீட்டை தண்ணீர் வைத்து அலசி விடும் போது சாதாரணமாக அலசி விடுவதை விட தண்ணீருடன் கடல் உப்பை சேர்த்து அந்த தண்ணீரை வைத்து உங்கள் வீட்டை அலசி விட்டால் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் செய்து வாருங்கள்.

-விளம்பரம்-

வறுமை நீங்க

ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள் இப்படி செய்வதன் மூலம் நமது வீட்டில் இருக்கும் வறுமை நீங்கிவிடும் இந்த பரிகாரத்தை செய்யும் போது எப்போதெல்லாம் தண்ணீர் நிறம் மாறுகிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் மாற்றி உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

Get The Right Value For Your Gold & Silver Coins

நிலை வாசல்

ஒரு சிவப்பு துணியில் ஒரு கை நிறைய உப்பு எடுத்து கட்டி உங்கள் வீட்டின் நிலை வாசலில் தொங்க விடுங்கள். இது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் மட்டும் நுழைய அனுமதித்து உங்களது வீடு முழுக்க நல்ல சக்தி பரவி இருக்க செய்யும்.

குளியலறை

உங்களின் உள்ளங்கை நிறைய உப்பு எடுத்துக்கொண்டு அதை ஒரு பவுலில் போட்டு உங்கள் வீட்டின் குளியலறையில் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் வறுமையையும் சேர்த்து நீக்கிவிடும். மேலும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு உப்பு சேர்த்து குளித்து வந்தால் எதிர்மறை ஆற்றல் நீங்குவதை நீங்களே உணர முடியும் என்கிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here