மீதமான இட்லியில் இப்படி கைமா இட்லி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படிகைமா இட்லி செய்து பாருங்கள். இந்த கைமா இட்லிக்கு ஒரு தனி சுவை இருக்கும். கைமா இட்லியுடன் சேர்த்து தொட்டுக்கொள்ள எதுவும் தேவை படாது .

-விளம்பரம்-

இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்லி காலை மற்றும் இரவு நேரங்களில் உணவாக பரிமாறப்படுகிறது. இட்லி உடன் சட்னி, சாம்பார், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும் . கைமா இட்லி, மீதமான இட்லி அல்லது ஆரிய இட்லியுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும். மசாலாவுடன் கலந்து பரிமாறப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது இட்லியின் சுவை கூடும் அதே சமயத்தில் இட்லி உப்புமா போன்று செய்யாமல், புதுமையாக கைமா இட்லி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

- Advertisement -

பொதுவாகவே இட்லி என்பது கொஞ்சமாகத்தான் மீதமாகும் அல்லவா. நான்கு அல்லது ஐந்து இட்லி மீதமாகும். அந்த இட்லியை இட்லி உப்புமா செய்தால் நீ சாப்பிடுவதா, நான் சாப்பிடுவதா என்ற பிரச்சினை இருக்கும். அதுவே மீதமான இட்லியில் இப்படி கைமா இட்லி சமைத்து கொடுத்து பாருங்கள்.  சூப்பரான மசாலா பொருட்கள் நிறைந்த காரசாரமான ஒரு ரெசிபி இது. இப்படி மீதமான இட்லியை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் மிச்சம் வைக்காமல் நீயா நானா என சண்டை போட்டு கொண்டு சாப்பிடுவார்கள் என்றால் பாருங்களேன். வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
5 from 1 vote

கைமா இட்லி | Scrambled Idly Recipe In Tamil

பொதுவாகவேஇட்லி என்பது கொஞ்சமாகத்தான் மீதமாகும் அல்லவா. நான்கு அல்லது ஐந்து இட்லி மீதமாகும்.அந்த இட்லியை இட்லி உப்புமா செய்தால் நீ சாப்பிடுவதா, நான் சாப்பிடுவதா என்ற பிரச்சினைஇருக்கும். அதுவே மீதமான இட்லியில் இப்படி கைமா இட்லி சமைத்து கொடுத்து பாருங்கள்.  சூப்பரான மசாலா பொருட்கள் நிறைந்த காரசாரமான ஒருரெசிபி இது. இப்படி மீதமான இட்லியை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் மிச்சம்வைக்காமல் நீயா நானா என சண்டை போட்டு கொண்டு சாப்பிடுவார்கள் என்றால் பாருங்களேன்.வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, snacks
Cuisine: tamilnadu
Keyword: Scrambles Idly
Yield: 4
Calories: 643kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 இட்லி
  • 1 வெங்காயம் பொடியாக
  • 2 டீஸ்பூன் இஞ்சி,பூண்டு பேஸ்ட்
  • 1 தக்காளி
  • 1/4 கப் பச்சை பட்டாணி வேக வைத்தது
  • 1/4 கப் குடைமிளகாய் நறுக்கியது
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • கொத்தமல்லி தழை சிறிது
  • உப்பு தேவையானஅளவு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச்சாறு 1டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு

  • 1 டீஸ்பூன் சோம்பு பொடி
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

செய்முறை

  • முதலில் இட்லிகளை துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைந்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த எண்ணெயில் இட்லிகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
  • பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை வாணலியில் சேர்த்து கிளறி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  • இறுதியில்பொரித்து வைத்துள்ள இட்லியை வாணலியில் போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லிதழை மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறினால்,
  • சுவையான கைமா இட்லி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 643kcal | Carbohydrates: 12g | Cholesterol: 2.4mg | Sodium: 334mg | Potassium: 423mg | Sugar: 2.1g | Calcium: 2.2mg