- Advertisement -
குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு,இட்லி . இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லி ருசியாகவா என்று தானே கேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம்.
-விளம்பரம்-
இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் தாளிப்பு சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ருசியுடன் சேர்ந்த ஆரோக்கியம் தானே. தாளித்து இட்லி மாவு மீது ஊற்றி வேக வைத்து கொடுக்கும் பொழுது அதனுடைய ருசியே அவ்வளவு டேஸ்டியாக இருக்கும். இதை ரொம்பவே சுலபமாக வீட்டிலும் நாம் தயாரிக்கலாம். இட்லி மாவு இருந்தால் கஷ்டப்படாமல் உடனே இப்படி ஒரு ஆரோக்கியமான உணவு கிடைத்தால் நல்லது தானே அப்படி ஒரு தாளிச்ச இட்லி ரெசிபியை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
- Advertisement -
தாளிச்ச இட்லி | Seasoned Idly Recipe In Tamil
இப்போதுஇந்த இட்லியில் கொஞ்சம் தாளிப்பு சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ருசியுடன் சேர்ந்த ஆரோக்கியம் தானே. தாளித்து இட்லி மாவு மீது ஊற்றி வேக வைத்து கொடுக்கும் பொழுது அதனுடைய ருசியே அவ்வளவு டேஸ்டியாக இருக்கும். இதை ரொம்பவே சுலபமாக வீட்டிலும் நாம் தயாரிக்கலாம். இட்லி மாவு இருந்தால் கஷ்டப்படாமல் உடனே இப்படி ஒரு ஆரோக்கியமான உணவு கிடைத்தால் நல்லது தானே அப்படி ஒரு தாளிச்ச இட்லி ரெசிபியை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Yield: 4
Calories: 643kcal
Equipment
- 1 இட்லி பாத்திரம்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் இட்லி மாவு
- 1/4 கப் பொடியாக நறுக்கிய காய்கறிகள்
- எலுமிச்சம்பழச்சாறு சிறிது
- உப்பு தேவையான அளவு
- மல்லித்தழை சிறிதளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1/4 கப் தேங்காய் துருவல் விருப்பப்பட்டால்
தாளிக்க
- கடுகு சிறிதளவு
- உளுத்தம்பருப்பு சிறிதளவு
- பெருங்காயம் சிறிதளவு
செய்முறை
- இட்லி மாவுடன் காய்கறிகளையும் உப்பையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
- கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இட்லி மாவில்கொட்டுக்ள்.
- பிறகு,பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் துருவல் சேர்த்து மாவை நன்கு கலக்குங்கள்.
- இட்லி தட்டில் எண்ணெய் தடவி சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி வேக வைத்து இறக்கவும்.
- சுவையான தாளிச்ச இட்லி தயார்.
Nutrition
Serving: 200g | Calories: 643kcal | Carbohydrates: 89g | Protein: 16g | Cholesterol: 2.4mg | Sodium: 334mg | Potassium: 422mg | Calcium: 2.2mg