ராம பக்தன் ஆஞ்சநேயர் ஏன் செந்தூரம் பூசிக் கொள்வார் என்று தெரியுமா ?

- Advertisement -

ராமர் மீது பக்தி பூண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இருந்தும் அனுமனுக்கு மட்டும் ஏன் ராம பக்தன் என்ற பெயர் கொடுத்தார்கள். ராமர் மேல் ஆஞ்சநேயருக்கு அத்தனை என்ன அளவு கடந்து பக்தி. அனைத்து பக்தியிலும் சிறந்த பக்தியாக அனுமரின் பக்தி ஏன் கொண்டாடப்படுகிறது. அவர் எப்படி ராமபிரானை நேசித்தார். ஆஞ்சநேயரின் சன்னதிகளில் பிரசாதமாக செந்தூரம் வழங்குவதற்கான காரணம் என்ன? ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவதற்கான காரணம் என்ன? இறைவன் மீது பக்தி கொண்ட பக்தன் இறைவனுக்காக என்னவெல்லாம் செய்வார். இவற்றையெல்லாம் ஆஞ்சநேயரிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

ஆஞ்சநேயரின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. அவருடைய வழிபாட்டிற்கும் காரணம் இருந்திருக்கிறது. இது எல்லாம் ராமபிரான் மேல் அனுமன் கொண்ட பக்தியின் காரணமாகவே நிகழ்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான பக்தியை ஆஞ்சநேய ராமபிரான் மேல் கொண்டிருந்த காரணத்தினால் அனுமன் என்ன செய்தார். தன் மார்பை பிளந்து ஸ்ரீராமரையும் சீதாதேவியையும் தன் நெஞ்சில் காட்டினார். அத்தனை அளவு கடந்த பக்தி கொண்டவர். இன்னும் என்ன செய்தார் தெரியுமா? தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஆஞ்சநேயரின் உன்னத பக்தி

எல்லா பொருளிலும் ராமரையும் சீதா தேவியையுமே கண்டார் ஆஞ்சநேயர். இராமபிரான் அளித்த முத்துமாலையில் கூட இராமர் இருக்கிறாரா என்று உடைத்து பார்த்திருக்கிறார். முத்துமாலை கையில் கிடைத்தால் கூட முத்தினுள் ராமபிரானும் சீதா தேவியும் இருக்கிறாரா என்று தேடும் அளவிற்கு ராமர் மீது பக்தி பூண்டவர். ராமனின் சொல்லுக்கு அப்படியே கட்டுப்பட்டவர். ராமர் மேல் அவர் கொண்ட பக்தி அவரை எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் எப்பொழுதும் ராமபிரானை பற்றிய எண்ணம் மட்டுமே கொண்டிருக்க வைத்தது. அப்படித்தான் செந்தூரமும் ஆஞ்சநேருடன் தொடர்பு கொள்ள காரணமாயிற்று. ராமபிரான் மேல் பக்தி கொண்டதால் அவர் செந்தூரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டார். பக்தி மட்டும் தான் ஆஞ்சநேயர் உடலில் செந்தூரத்தை பூசிக்கொள்ள காரணமாக இருந்ததா? ஆஞ்சநேயர் உடலில் செந்தூரத்தை பூசி கொள்வதற்கான புராண கதை ஒன்று உள்ளது வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

செந்தூரம் பூசுவது ஏன்?

ராமர் சீதா தேவியை இலங்கையில் இருந்து மீட்டு அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் எல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் அரசவை கூடி இருந்ததாம் அன்று சீதாதேவி அரசவைக்கு வர தயாராகிக் கொண்டிருந்தார். அதற்குள் ராமபிரானின் சேவகன் ஆன அனுமார் சீதா தேவியை அரசவைக்கு அழைத்துச் செல்ல வந்தாராம். அப்பொழுது சீதாதேவி வெள்ளி குங்குமச்சிமிழிலிருந்து செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் வைத்தாராம்.

இதை பார்த்த ஹனுமர் சீதா தேவியிடம் ” தாயே நான் தங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்? ” அப்படி என்றாராம். அதற்கு சீதா தேவி “தாராளமாக கேள்” என்றாராம்.சீதா தேவியிடம் “தாயே தாங்கள் ஏன் தங்கள் நெற்றியில் செந்தூரம் வைத்துக் கொள்கிறீர்கள்? என்று கேட்டாராம் .அதற்கு சீதா தேவியோ “என் கணவர் நீடூடி வாழ வேண்டும் என்பதற்காக நான் நெற்றி வகையில் செந்தூரத்தை வைத்துக் கொள்கிறேன்” என்று கூறினாராம்.அதைக் கேட்ட அனுமார் “தாயே தாங்கள் அரசவைக்கு செல்லுங்கள் நான் வந்து விடுகிறேன்” என்று கூறினாராம். சீதாதேவி அரசவைக்கு சென்ற பிறகு ஸ்ரீ ராமர் கேட்டாராம் “அனுமன் எங்கே? என்று. அதற்கு சீதா தேவியோ “சற்று நேரத்தில் வந்து விடுவதாக குறி சென்றுள்ளார்” என்று உரைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சற்று நேரம் கழித்து அனுமத் தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொண்டு வந்தாராம் இதை பார்த்த ராமபிரான் ” இது என்ன கோலம்” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அனுமாரோ “தாயார் தனது நெற்றி வகிட்டில் வைக்கும் செந்தூரமே தங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும் என்றால் நான் என் உடல் முழுவதும் பூசி கொள்வேன் உங்கள் ஆயுளுக்காக” என்று உரைத்தாராம். அதை கேட்ட இராமரின் கண்கள் பணித்து ஹனுமருடைய பக்தியையும் வெகுளித்தனத்தையும் நினைத்து பூரித்து போனாராம். ராமபிரான் அப்படியே அனுமாரை கட்டித் தழுவியும் கொண்டாராம்.

ராமபக்தன் ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயபெருமான் ராமபிரான் மீது எத்தனை அன்பும் பக்தியும் பூண்டிருந்தால் ராமபிரானின் ஆயுளுக்காக இப்படி உடல் முழுவதும் செந்தூரத்தை தரித்துக்கொண்டு இருப்பார். இப்படிப்பட்ட உன்னத பக்தியையே இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். உள்ளத்தில் வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதோடு இறைவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயபெருமானே சிறந்த பக்தன். அவரே ராம பக்தனாகிறார் இப்படி இறைவனின் ஆயுளுக்காகவே தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொள்ளும் ஆஞ்சநேய பெருமானின் பக்தி எத்தனை உன்னதமானது. ஆகையால் தான் இன்றளவும் ஆஞ்சநேயரின் கோவிலில் செந்தூரத்தை பிரசாதமாகவும் ஆஞ்சநேயபெருமானின் மீது செந்தூரத்தை பூசி வழிபடுவதையும் காலம் காலமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி ராமபிரான் மீது அனுமன் பக்தி அளவு கடந்தது.

இப்பொழுதும் ராமாயணம் படிக்கும் இடங்களில் எல்லாம் அனுமருக்கு என்று ஒரு இடம் ஒதுக்கி அதில் நெய்வேத்தியத்திற்காக ஏதாவது ஒரு பொருள் வைப்பார்களாம். ஏதோ ஒரு ரூபத்தில் அனுமனின் ஆசியோடு அந்த பிரசாதத்தை அவர் ஏற்றுக் கொள்வதாக நம்புகிறார்கள். ராம நாமம் எங்கெல்லாம் உச்சரிக்கப்படுகிறது எங்கெல்லாம் ராமாயணம் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயபெருமான் அருள் புரிவதோடு மட்டுமல்லாமல் வாசமும் செய்கிறார்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : காசிக்கு சென்றால் அடுத்தது ஏன் ராமேஸ்வரமும் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா ?