இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. சேப்பங்கிழங்கு நம்முடைய ஊர்களில் குட்டிக்குட்டியாகக் கிடைக்கும். இவை பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளன. இவற்றை சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் நன்றாக சிவந்து வரும். அவ்வளவாக கொழகொழப்பு தெரியாது. நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் செய்யும்போது வாசனைக் கொஞ்சம் கூடுதலாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும். இதே போல் இவற்றுடன் பூண்டைத் தட்டிப் போடுவது நல்ல வாசனை மற்றும் சுவையைக் கொடுக்கும்.
கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி நார்ச்சத்துக்களும் அதிகம் இருக்கும் என்பதால், அவ்வப்போது கிழங்கு வகைகளை சமைத்து சாப்பிடுவது நல்லது. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. ஆனால் அந்த உருளைக்கிழங்கு போலவே சேப்பங்கிழங்கும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் அந்த சேப்பங்கிழங்கை மசியல் செய்து, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பபி சாப்பிடுமாறும் இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.
சேப்பங்கிழங்கு மசியல் | Seppankizhangu Masiyal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கி சேப்பங்கிழங்கு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- உப்பு தேவையான அளவு
- 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
தாளிக்க :
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் சேப்பங்கிழங்கு நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- பின் இவை ஆறினதும் அதன் தோலை நீக்கி விட்டு கையால் மசித்துக் கொள்ளவும். மசித்த சேப்பங்கிழங்கில் அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வறுக்கவும். அதன்பிறகு சேப்பங்கிழங்கை சேர்த்து எண்ணெயிலேயே வெந்து மசிந்ததும், அடுப்பை அணைத்து விடவும்.
- பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் வித்தியாசமான, சுவையான சேப்பங்கிழங்கு மசியல் தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு எப்படி ருசியா செய்வதுன்னு தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!