இதுவரை நீங்கள் சுவைத்து கூட பார்க்காத எள் காலிஃப்ளவர் ரெசிபி! அடுத்தமுறை காலிஃபிளவர் வாங்கினால் இப்படி ட்டை பன்னுங்க!

- Advertisement -

காலிஃப்ளவர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காலிஃப்ளவரை கோபி என்று கூறுவார்கள். ஹோட்டலுக்கு சென்றாலே கோபி மஞ்சூரியன் கேட்டு வாங்கி சாப்பிடும் காலிஃப்ளவர் பிரியர்களுக்கு இந்த எள் காலிஃப்ளவர்  ரொம்பவே பிடிக்கும். எளிதான முறையில் எள் காலிஃப்ளவர்  வீட்டிலேயே தயாரிக்கலாம்.

-விளம்பரம்-

சில நேரங்களில் சைவம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ஆனால், நமக்கு அந்த நேரத்தில் அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அசைவ பிரியர்களுக்கு எள் காலிஃப்ளவர்  இப்படி செய்து கொடுத்து பாருங்கள். தயிர் சாதம், ரசம் சாதம், கில்லி போட்ட சாம்பாருக்கு தொட்டு கொண்டால், அசைவம் சாப்பிட்டது போலவே நிறைவு நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

முற்றிலும் வித்தியாசமான ஒரு எள் காலிஃப்ளவர் தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இப்படி ஒரு எள் காலிஃப்ளவர் நீங்கள் எந்த இடத்திலும் இதுவரை டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு அட்டகாசமான சுவையில் எள் காலிஃப்ளவர்  செய்வது எப்படி. சும்மா ஒரு பேச்சுக்காக சொல்லலைங்க. இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கும்போது, உங்களுக்கே வித்தியாசம் தெரியும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அல்லது மாலை சிற்றுண்டியாக எள் காலிஃப்ளவர் அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

எள் காலிஃப்ளவர் | Sesame Cauliflower Recipe In Tamil

முற்றிலும் வித்தியாசமான ஒரு எள் காலிஃப்ளவர்தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இப்படி ஒரு காலிபிளவர் கிரேவியை நீங்கள் எந்தஇடத்திலும் இதுவரை டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு அட்டகாசமான சுவையில்எள் காலிஃப்ளவர்  செய்வது எப்படி. சும்மா ஒருபேச்சுக்காக சொல்லலைங்க. இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கும்போது, உங்களுக்கே வித்தியாசம்தெரியும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அல்லது மாலை சிற்றுண்டியாக எள் காலிஃப்ளவர் அவ்வளவுஅற்புதமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish, snacks
Cuisine: tamil nadu
Keyword: Sesame Cauliflower
Yield: 4
Calories: 25kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 காலிஃப்ளவர்
  • 1 சிட்டிகை பேகிங் பவுடர்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 5 மேஜைக்கரண்டி வெள்ளை எள்
  • 2 தேக்கரண்டி சோயா சாஸ்
  • நல்லெண்ணெய் பொரிப்பதற்கு
  • எள் தேவைக்கேற்ப
  • 1/2 கப் மக்காச் சோள மாவு
  • 1 சிட்டிகை பேகிங் பவுடர்
  • உப்பு ருசிக்கேற்ப
  • 2 தேக்கரண்டி இஞ்சி, பச்சை மிளகாய் விழுது

செய்முறை

  • காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடு‌த்து, அதனை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும்.
  • சோயா சாஸுடன் உப்பு, மிளகுத் தூள், பேகிங் பவுடர், சிறிது அஜினோ மோட்டோ சேர்த்து கலக்கவும்.
  • இதில் காலிஃப்ளவரை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ம‌க்கா‌ச் சோள மாவு,பே‌‌கி‌ங் பவுட‌ர், ‌சி‌றிது உ‌ப்பு, இ‌‌ஞ்‌சி,ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது ஆ‌கியவ‌ற்றைத‌ண்‌ணீ‌ர்‌வி‌‌ட்டு கலந்து மேல்மாவை பஜ்ஜி மாவு போல கரைக்கவும்.
  • ஊற வை‌த்‌திரு‌க்கு‌ம் காலிஃப்ளவரை மேல்மாவில் தோய்த்து, எள்ளின் மேல் புரட்டி எடுத்து, சூடான நல்லெண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • சுவையான எ‌ள் காலிஃப்ளவர் தயார்!!!

செய்முறை குறிப்புகள்

தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Nutrition

Serving: 500g | Calories: 25kcal | Carbohydrates: 5.3g | Protein: 2g | Fat: 0.1g | Potassium: 303mg | Fiber: 5.5g | Vitamin C: 46.4mg | Calcium: 22mg