மட்டன் குழம்பு சிம்பிளா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

என்னதான் நம்ம மட்டன் எடுத்து விதவிதமா பெப்பர் மசாலா மட்டன் சுக்கா மட்டன் 65 மட்டன் சில்லி அப்டின்னு செஞ்சாலும் மட்டன் எடுத்தாலே மட்டன் குழம்பு வச்சு சாப்பிடுவதில் தான் ஒரு தனி சோகமே இருக்கு ஆனா பிகினர்ஸா இருக்கிற நிறைய பேருக்கு சமைக்கவே தெரியாத உங்களுக்கு மட்டன் குழம்பு ரொம்பவே எப்படி ஈசியா வைக்கணும் அப்படின்னு தான் இப்ப பாக்க போறோம் மட்டன் குழம்பு ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைல்ல வைப்பாங்க ஆனா இன்னைக்கு நம்ம வைக்கப்போற இந்த மட்டன் குழம்பு ரொம்ப சிம்பிளா வைக்கக்கூடியது தான் வீட்ல குழம்பு மிளகாய்த்தூள் இல்லனா மட்டன் மசாலா வாங்கி செஞ்சா இதோட மணமே சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

மதியானம் லஞ்சுக்கும் காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கும் இந்த ஒரு மட்டன் குழம்பு மட்டுமே போதும் ரொம்ப சூப்பரா இருக்கும் சாப்பிடுறதுக்கு. மட்டன் குழம்பு வைக்க தெரியலனா கவலையே படாதீங்க இல்ல உங்களுக்கு எப்படி மட்டன் குழம்பு வச்சாலும் டேஸ்ட்டாவே வரமாட்டேங்குதா அப்பவும் கவலைப்படாதீங்க இப்ப சொல்ற மாதிரி இதே மெத்தட்ல கரெக்டான அளவுகள்ள மட்டும் மட்டன் குழம்பு வச்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்பவுமே இந்த ஸ்டைல்ல தான் மட்டன் குழம்பு வைப்பீங்க வறுத்து அரைச்சு தேங்காய் எல்லாம் ஊத்தி செய்ற இந்த மட்டன் குழம்போட சுவை தனி ருசியா இருக்கும்.

- Advertisement -

இந்த மாதிரி ஒரு டேஸ்ட் இல்ல நீங்க இதுவரைக்கும் மட்டன் குழம்பு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் ரொம்ப சிம்பிளா தான் இருக்கும் ஆனா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான டேஸ்டான எல்லாரும் வைக்கக்கூடிய மட்டன் குழம்பு எப்படி ஈஸியா வைக்கிறது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

மட்டன் குழம்பு | Simple Mutton Kulambu Recipe In Tamil

மதியானம் லஞ்சுக்கும் காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கும் இந்த ஒரு மட்டன் குழம்பு மட்டுமே போதும் ரொம்ப சூப்பரா இருக்கும் சாப்பிடுறதுக்கு. மட்டன் குழம்பு வைக்க தெரியலனா கவலையே படாதீங்க இல்ல உங்களுக்கு எப்படி மட்டன் குழம்பு வச்சாலும் டேஸ்ட்டாவே வரமாட்டேங்குதா அப்பவும் கவலைப்படாதீங்க இப்ப சொல்ற மாதிரி இதே மெத்தட்ல கரெக்டான அளவுகள்ள மட்டும் மட்டன் குழம்பு வச்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்பவுமே இந்த ஸ்டைல்ல தான் மட்டன் குழம்பு வைப்பீங்க வறுத்து அரைச்சு தேங்காய் எல்லாம் ஊத்தி செய்ற இந்த மட்டன் குழம்போட சுவை தனி ருசியா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Simple Mutton Kulambu
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மட்டன்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் மட்டன் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • குக்கரில் மட்டனை கழுவி சேர்த்துக்கொண்டு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுக்கவும்
  • ஒரு கடாயில் சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி சேர்த்து அதை எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி எடுத்து ஆற வைத்து மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள மட்டனுடன் மட்டன் மசாலா அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
  • பத்து நிமிடங்களுக்கு பிறகு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதனையும் சேர்த்து மட்டனுடன் நன்றாக கலக்கவும்
     
Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Cholesterol: 2mg | Potassium: 381mg

இதையும் படியுங்கள் : ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி செஞ்சு பாருங்க!