நம்மில் பலருக்கும் கடவுள் மேல் அதீத நம்பிக்கை இருக்கும். அவரவர் அவருக்கு பிடிக்கும் கடவுளை அவர்கள் வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றே. நமது வீட்டில் அனைத்து கடவுள்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்று. கடவுள்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது மங்களகரமான ஒன்றே.
கடவுள்களின் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து பணவரவை அதிகரிக்க செய்யும். அது மட்டுமில்லாமல் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை பெறுக செய்யும். நம்மில் பலரும் விநாயகர் மற்றும் கிருஷ்ணன் சிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்வது வழக்கமான ஒன்று.
இந்து மதத்தில் சிவபெருமான் வழிபாடு தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் பலரும் அவர்கள் வீட்டில் சிவபெருமானின் சிலையை வைத்து வழிபட தயங்குவார்கள் ஏனென்றால் சிவன் அளிக்கும் கடவுளைச் சார்ந்தவர், ஆனால் அப்படி இல்லை சிவபெருமானின் சிலையை கூட நமது வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சிவபெருமானின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
எனவே நீங்களும் சிவனின் அருளைப் பெற்று வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க நினைத்தால், சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வீட்டில் வையுங்கள். ஆனால் சிவனின் போட்டோவை வீட்டில் வைக்கும் முன் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த வகையான சிவனை வைக்காதீர்கள்
வாஸ்து படி, வீட்டில் சிவனின் போட்டோவை வைக்க நினைத்தால், சிவன் கோபமான நிலையில் இருக்கும் போட்டோவை வைக்காதீர்கள். ஏனெனில் சிவனின் கோபமான நிலை அழிவைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட போட்டோவை வைத்தால், அது வீட்டில் உள்ள சந்தோஷம், அமைதி, செல்வம் போன்ற அனைத்திலும் தடையை ஏற்படுத்தும்.
எந்த மாதிரியான சிவனை வைக்கலாம்?
வீட்டில் சிவனின் போட்டோவை வைக்க விரும்பினால், மகிழ்ச்சியான நிலையில் உள்ள சிவனின் போட்டோவை மட்டும் வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நீடிக்கும். வாஸ்துப்படி, வீட்டில் சிவன் மட்டும் இருக்கும் போட்டோவை வைப்பதற்கு பதிலாக, சிவனுடன் பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் இருக்கும் குடும்ப போட்டோவை வையுங்கள். இது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.
சுத்தம் அவசியம்
வீட்டில் சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வைத்தால், அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகள் மற்றும் அழுக்குகள் நிறைந்தவாறு சிவனின் போட்டோ அல்லது சிலையை வைத்திருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, நற்பலனுக்கு பதிலாக, கெடுபலனை அளிக்கும்.
எந்த திசையில் சிவனின் போட்டோவை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வைப்பதாக இருந்தால், அதை வீட்டில் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். ஏனெனில் சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலை வடக்கு திசையில் தான் அமைந்துள்ளது.