ரோட்டு கடை ஸ்டைல் புடலங்காய் பஜ்ஜி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! ருசி அபாரமாக இருக்கும்!

- Advertisement -

பஜ்ஜி ரோட்டுக் கடைகளிலும் கிடைக்கும் அற்புதமான சிற்றுண்டி. பண்டிகை நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம். மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவோம், குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. ஆகவே எளிய பொருட்களை கொண்டு இப்பவே உங்கள் வீட்டில் புடலங்காய் பஜ்ஜி செய்யலாம்.

-விளம்பரம்-

பொதுவாக புடலங்காயை கூட்டு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குளிர்காலத்தில் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது இதமாக ஏதேனும் மொறுமொறுவென்று சாப்பிட நினைத்தால், புடலங்காயை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சூடான காஃபி அல்லது டீயுடன் இந்த மிளகாய் பஜ்ஜிகளை செய்து ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிட்டலாம் வாங்க.

- Advertisement -
Print
No ratings yet

புடலங்காய் பஜ்ஜி | Snake Gourd Bajji Recipe in Tamil

பஜ்ஜி ரோட்டுக் கடைகளிலும் கிடைக்கும் அற்புதமான சிற்றுண்டி. பண்டிகை நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம். மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவோம், குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. ஆகவே எளிய பொருட்களை கொண்டு இப்பவே உங்கள் வீட்டில் புடலங்காய் பஜ்ஜி செய்யலாம். பொதுவாக புடலங்காயை கூட்டு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குளிர்காலத்தில் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது இதமாக ஏதேனும் மொறு மொறுவென்று சாப்பிட நினைத்தால், புடலங்காயை பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: snacks
Cuisine: Indian, tamilnadu
Keyword: bajji
Yield: 5 People
Calories: 155kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 பெரிய கண் கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 புடலங்காய்
  • 1 1/2 கப் கடலை மாவு
  • 1/2 கப் அரிசி
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் புடலங்காய்களை வட்ட வடிவமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைக்கவும்.
  • பின்னர் நறுக்கி வைத்த புடலங்காய்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான புடலங்காய் பஜ்ஜி ரெடி.

Nutrition

Serving: 600g | Calories: 155kcal | Protein: 7g | Fat: 5g | Saturated Fat: 0.2g | Sodium: 57mg | Potassium: 7mg | Fiber: 3g | Vitamin A: 22IU | Vitamin C: 16mg | Calcium: 0.4mg | Iron: 0.9mg