சோகம் தீர்க்கும் சோமவார விரதம் இருப்பது எப்படி? சோமவார விரதம் இருப்பதன் பலன் மற்றும் அதன் வரலாறு!

- Advertisement -

பல மாநிலங்களில் திங்கள்கிழமை தோறும் சிவபெருமானை பிரார்த்தித்து சோமவார விரதங்கள் இருப்பது வழக்கம். அப்படி அந்த சோமவார விரதத்தின் மகிமைகள் என்ன? பலன்கள் என்ன? அதன் வரலாறு என்ன ? என்பதை எல்லாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த சோமவார விரதத்தை கார்த்திகை திங்கட்கிழமைகளில் ஆரம்பித்து தொடர்ந்து இருத்தல் வேண்டும். அப்படி இந்த சோமவார விரதம் இருந்தால் தம்பதியர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி நிம்மதி பெருகும். இப்படி இந்த சோமவார விரதத்தை இருப்பதால் நாம் சிவனுக்கு விருப்பமானவராகி விடுவோம். சிவபெருமானின் அருளை பெறுவது பெரும் பேறு என்று நினைக்கும் நாம் இப்படி சிவபெருமானுக்கே விருப்பமானவர் ஆகிவிட்டால் இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும். அப்படிப்பட்ட சோமவார விரதத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

விரதம் ஏற்பட காரணம்?

சந்திர பகவான் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அப்பொழுது அவருடைய சாபம் நீங்குவதற்கு திங்கள் கிழமைகளில் சிவனை நோக்கி விரதம் இருந்து தன் சுயரோகம் போவதற்கு வேண்டிக்கொண்டாராம். அவர் விரதத்தின் பலனாக அவரது குஷ்ட நோயும் நீங்கிவிட்டது . இந்த விரதத்தை சந்திரனுடன் சேர்ந்து ரோகினியான அவரது மனைவியும் விரதம் இருந்தாராம். அதனால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையுடன் சகல சௌபாக்கியத்துடன் திகவார்கள். கணவனின் வாழ்வு மேம்பட இந்த விரதத்தை கடைபிடித்தல் வேண்டும்.

- Advertisement -

பார்வதியிடம் சாபம் பெற்ற அந்தணன்

ஒருமுறை சிவனும் பார்வதி தேவியும் ஒன்றாக அமர்ந்து சொக்கட்டான் ஆடினார்களாம். அந்த சொக்கத்தானில் பார்வதி தேவியே வெற்றி பெற்றாராம். ஆனால் ஈசனும் தான் வெற்றி பெற்றேன் என்று கூறினாராம். உடனே பார்வதி தேவி இதற்கு நடுநிலைக்காக ஒருவர் வரவேண்டும் என்று கூறினார். உடனே சிவன் ஒரு அந்தணரை அழைத்தார். மீண்டும் ஒருமுறை விளையாடினால்தான் யார் வெற்றி பெற்றார் என்று எனக்கு தெரியும் என்று கூறினாராம். மீண்டும் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாடினார்களாம் இதிலும் பார்வதி தேவையை வெற்றி பெற்றாராம். ஆனால் சிவன் அழைத்த காரணத்தால் அந்தணர் சிவபெருமான்தான் வெற்றி பெற்றார் என்று கூறினாராம். இதனால் பார்வதி தேவி அந்தணர்க்கு சாபமிட்டாராம். பொய் கூறியதால் அந்தணருக்கு குஷ்ட நோய் வருமாறு சாபம் கொடுத்திருக்கிறார். சாபம் பெற்ற அந்த நேரம் செய்வதறியாவது திகைத்து சிவபெருமானிடம் முறையிட்டாராம். அதற்கு சிவபெருமானும் இது பார்வதி தேவி இட்ட சாபம் ஆகையால் இதற்கு விமோசனம் கிடையாது என்று கூறி அனுப்பி விட்டாராம்.

சாப விமோசனம் பெற சோமவார விரதம்

சிவனுக்காக பொய் சொல்ல போய் நமக்கு குஷ்ட நோய் ஏற்பட்டு விட்டதே என்று மனம் வருந்தி அந்த அந்தணர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாராம். அப்பொழுது அந்த வழியாக சென்ற பெண் அவரை தடுத்து நிறுத்தி காரணம் கேட்டார். அந்தணர் நடந்தவற்றை கூறினார் அதற்கு அந்த பெண் கூறினாராம் இந்திரன் இட்ட சாபத்தால் நான் பூலோகத்தில் பிறந்தேன் 16 திங்கட்கிழமை சோமவார விரதம் இருந்து சாபம் நீங்க பெற்று இப்பொழுது இந்திரலோகம் சென்று கொண்டிருக்கிறேன். ஆகையினால் நீங்களும் சோமவாரத விரதம் இருங்கள் என்று கூறினாராம். ஆனால் இப்பொழுது என்னால் சோமவார விரதம் மகிமையை எடுத்துக் கூற இயலாது தாங்கள் பக்கத்தில் உள்ள விதர்பாநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் பெண்கள் சோமவார மகிமையை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள் அவர்களிடம் கேளுங்கள் தங்களுக்கு விரதத்தின் மகிமை மற்றும் விரத முறை பற்றி சொல்வார்கள் என்று கூறினார்.

சோமவார விரத முறை

விதர்பாநகர் சென்ற அந்தன அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சிறு பெண்கள் என்றும் பாராமல் அவர்களில் காலில் விழுந்து தானும் சோமவார விரதம் இருக்க வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை கூறுங்கள் என்றும் வேண்டிக் கொண்டார். அதற்கு பெண்கள் அச்சோமவார விரதத்தினால் தாங்கள் பெற்ற பலன்களையும் அந்த விரதமும் எப்படி இருக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த விரதத்தை கார்த்திகை திங்கட்கிழமையில் தொடங்கி 16 திங்கட்கிழமைகள் சிவபெருமானை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும் என்று கூறினார்கள். பதினாறு சோமவார விரதங்கள் முடிந்த பிறகு 16வது விரதத்திற்கு அடுத்த நாள் 16 லட்டுக்கள் செய்து எடுத்து கொண்டு சிவபெருமானிடம் சென்று அவருக்கு பூஜை செய்து அந்த நெய்வேத்திய லட்டுக்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து தானும் உண்டு ஒரு லட்டுவை பசுவிற்கும் கொடுத்து மீதி லட்டுக்களை வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். அவ்வாறு எடுத்து வந்த லட்டுக்களை மாலை விளக்கேற்றும் நேரத்திற்கு முன்பே அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் யாரிடமும் கோபப்படாமல் அமைதியாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு பூஜை செய்தால் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது என்று கூறினார்கள். உடனே அந்தணர் 2 வருடம் 8 சோமாவாரங்கள் இந்த சோமவார விரதத்தை கடைபிடித்து தன் நோய் நீங்க பெற்றார்.

-விளம்பரம்-

விரதம் எப்படி தொடங்குவது?

இந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையிலிருந்து தொடங்கி வருடம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சித்திரை , வைகாசி, ஆவணி, மார்கழி மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து இருக்க வேண்டும். ராகு காலத்திற்கு முன்பே பூஜையை தொடங்க வேண்டும். அதிகாலையில் கணபதியை வணங்க வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து தேங்காய் உடைத்து கற்பூர தீப ஆராதனை காட்ட வேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் உள்ள நீரில் நாணயம், மஞ்சள் தூள், நறுமணப் பொருட்கள் சேர்த்த பிறகு கலசத்திற்கு மேலே மாவிலை வைக்க வேண்டும். கலசத்தின் மையப்பகுதியில் மஞ்சள் தடவி தேங்காயை வைத்து சந்தன குங்குமம் விட்டு அதன் பிறகு பூஜையை தொடங்க வேண்டும்.

நெய்வேத்தியம் மற்றும் ஆசி பெறுதல்

இந்த பூஜைக்கு நெய்வேத்தியமாக சாதம், நெய் , பருப்பு , பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது மேலும் சிறப்பை தரும். பிறகு இறைவனுக்கு தூபதீப ஆராதனைகள் காட்டிய பிறகு வீட்டிற்கு வயது முதிர்ந்த தம்பதிகளை அழைத்து அவர்களை சிவன் பார்வதியாக நினைத்து சந்தன குங்குமம் விட்டு அவர்களுக்கு புது புடவை, ரவிக்கை, வேட்டி , துண்டு, வெற்றிலை பாக்கு, தட்சனை கொடுத்து அன்னதானமும் செய்ய வேண்டும். பிறகு அவர்களிடம் அட்சதை கொடுத்து நாம் ஆசியை வாங்கிக் கொள்ள வேண்டும்.

விரதம் கொடுக்கும் நன்மைகள்

இந்த கார்த்திகை மாத சோமவார விரதம் இருந்தால் தீராத நோய்கள் தீர்ந்து துன்பங்கள் துடைத்தெறிந்து இல்லத்தில் நல் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் கிடைக்கப்பெறும். இந்த விரதத்தை கார்த்திகை மாதம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் அல்லது 12 வருடங்களோ கடைபிடிக்கலாம். அவ்வாறு கடைப்பிடிக்க இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முழுவதுமாவது இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த சோமவார விரதத்தின் போது உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் ஒரு பொழுது மட்டுமாவது உணவு உண்டு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த சோமவார விரதத்தை மேற்கொள்வதால் முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து நோய்களும் தீர்ந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் பார்வதி பரமேஸ்வரன் அருளும் கிடைக்கும் என்பது திண்ணம்.

-விளம்பரம்-