கோதுமை மாவு இருந்தா போதும் ருசியான வெஜிடபுள் கார போளி ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

வெஜிடபுள் கார போளி கார போளி முட்டைக்கோஸ்,காரட், பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு போளி செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு  முட்டைக்கோஸ்,காரட்  பூரணம் செய்து அதனை கோதுமை மாவில் வைத்து தட்ட வேண்டும்,  இனிப்பு போளி  விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம்.

-விளம்பரம்-

உங்க கிட்ட கோதுமை மாவு இருந்தா அத வைச்சு சுவையான இந்தா வெஜிடபுள் கார போளி சூப்பரா செய்திடலாம். இதுக்கு மேல இந்த ரெசிபியை ஈஸியா செய்யவே முடியாது. இது எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு தான் போளி. இது மற்ற பொருட்களைப் உணவுகளை போல் அனைத்து கடைகளிலும் சாதரணமாக கிடைக்காது. உடனடியாக போளி செய்ய பலரும் யோசிக்கப்பார்கள்,காரணம் அதை செய்யும் முறை கொஞ்சம் சிரமம்.

- Advertisement -

இந்த பதிவில் இந்த போளியை மிகவும் சுலபமாகவும்  சிம்பிளா அதே நேரத்துல ரொம்ப சீக்கிரமாக செய்யறது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த போளி செய்வதற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவு, காய் கறி சேர்த்து செய்வதால், இது மிகவும் ஆரோக்கியமானது. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .

Print
4.50 from 2 votes

வெஜிடபுள் கார போளி | Spicy Veg Poli Recipe In Tamil

கோதுமை மாவு இருந்தாஅத வைச்சு சுவையான இந்தா வெஜிடபுள் கார போளி சூப்பரா செய்திடலாம்.வெஜிடபுள் கார போளி கார போளி முட்டைக்கோஸ்,காரட்,பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு போளி செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய்பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு  முட்டைக்கோஸ்,காரட்  பூரணம் செய்து அதனை கோதுமை மாவில் வைத்து தட்ட வேண்டும்,  இனிப்பு போளி விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Spicy Veg Poli
Yield: 4
Calories: 0.285kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 பாகம் முட்டைக்கோஸ்
  • 1 காரட்
  • 1 வெங்காயம்
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 3 பச்சைமிளகாய்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

செய்முறை

  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும். முட்டைக்கோஸ், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை கேரட் துருவலின் மூலம் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் காரட், முட்டைக்கோஸ், பச்சைமிளகாய், வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, கரம் மசாலாதூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். ஏனெனில் காய்கறிகளில் இருக்கும் தண்ணீர் மாவு பிசைவதற்கு போதுமானது. பிசைந்த மாவை ஊற வைக்க வேண்டியதில்லை.பிசைந்தும் சப்பாத்தியாக இடலாம்.
  • இரண்டாக மடிக்கும் படியான ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். சப்பாத்தி செய்யும் ப்ரஸ்ஸரில் எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரை வைத்து அதில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து நடுவில் வைத்து அழுத்தி சப்பாத்தியாக போடவும்.
  • தோசை கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு எண்ணெய் மேலே ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான வெஜிடபுள் கார போளி ரெடி இதை தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
     

Nutrition

Serving: 1g | Calories: 0.285kcal | Carbohydrates: 0.285g | Protein: 12.2g | Fat: 10.4g | Sugar: 3.8g