- Advertisement -
சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. இது செய்வதற்கு சுலபமானதும்கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே! இந்த சுவையான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான கீரை சாண்ட்விச் செய்ய மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
-விளம்பரம்-
இதனையும் படியுங்கள் : பச்சைக் கீரை & ஓட்ஸ் கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
ஒரு பழம் அல்லது ஒரு கிளாஸ் பழச்சாறுடன் இணைந்தால், இது ஒரு நிரப்பு மற்றும் ஆரோக்கியமான காலை உணவை உருவாக்குகிறது. மிகவும் எளிமையானது, விரைவானது மற்றும் உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் இந்த பதிவில் சுவையான கீரை சீஸ் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
கீரை சீஸ் சாண்ட்விச் | Spinach Cheese Sandwich Recipe in Tamil
சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே! இந்த சுவையான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான கீரை சாண்ட்விச் செய்ய மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
Yield: 3 People
Calories: 20kcal
Equipment
- 1 தோசை கல்
- 1 கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 கப் கீரை
- 8 துண்டு பிரெட் ஸ்லைஸ்
- வெண்ணெய் தேவையானஅளவு
- 1 டீஸ்பூன் பூண்டு பொடி
- 1 டீஸ்பூன் சீரகப் பொடி
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
- 1 கப் துருவிய சீஸ்
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கீரை சேர்த்து வதக்கவும். அளவு குறையும், நன்றாக வதங்கின பின் 2 கப் தான் வரும்.
- அதனை ஆற வைக்கவும். பின் கையால் பிழிந்து நீரை எடுத்து விடவும், நீர் நீங்கிய கீரையை ஒரு பாத்திரத்தில் வைத்து பூண்டு, மிளகு மற்றும் சீரகப்பொடிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்னர் அதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். துருவிய சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- மிதமான நெருப்பின் மேல் தோசைக்கல்லை வைக்கவும் அது சூடான பின் வெண்ணை தடவி பிரட் துண்டுகளை ஒரு பக்கம் டோஸ்ட் செய்யவும்.
- பின்னர் அதனை வெளியே எடுத்து கலந்து வைத்த கீரை கலவையை டோஸ்ட் செய்த பக்கத்தில் தடவவும்.
- மிதமான நெருப்பின் மேல் அதே தோசைக் கல்லிலை சூடு செய்து வெண்ணை தடவவும்.
- டோஸ்ட் செய்யாத பக்கத்தை அதன் மேல் வைத்து மூடி சீஸ் உருகும் வரை வேக வைக்கவும்.
- வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். பின் சீஸ் விரும்பினால் மேலே சீஸ் தூவி சீஸ் உருகும் வரை 1நிமிடம் வைக்கவும்.
- சுவையான சத்தான கீரை சண்ட்விச் ரெடி. உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Nutrition
Serving: 500g | Calories: 20kcal | Carbohydrates: 3.63g | Protein: 2.86g | Fat: 0.39g | Sodium: 79mg | Fiber: 2.2g | Sugar: 0.42g | Vitamin A: 9377IU | Vitamin C: 28.1mg | Calcium: 99mg