மதிய உணவுக்கு ஏற்ற வெங்காயத்தாள் பொரியல் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

- Advertisement -

நிறைய பேருக்கு வெங்காயத்தாள் வைத்து பொரியல் செய்யலாம் என்று தெரியாது. வெங்காயத்தாள் என்றாலே  சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.சூப்பரான வெங்காயத்தாள் பொரியல் செய்வதும் சுலபம்.

-விளம்பரம்-

மஞ்சூரியன் என்றால் என்னன்னு தெரியாதவர்களும் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள். மஞ்சூரியனா? என்று முதல் முறையாக சாப்பிடும் பொழுது நாமும் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டிருப்போம். அதில் சேர்க்கப்படும் வெங்காயத்தாள் மணமும் அனைவர்க்கும் பிடிக்கும்.  அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான

- Advertisement -

ஒரு வகை சைவ உணவு தான் இந்த வெங்காயத்தாள் பொரியல். இதை வெங்காயத்தாள் கொண்டு செய்யப்படுகிறது. பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் துரித உணவு வகையில் வரும் சுவையை இந்த வெங்காயத்தாள் சமையல் மூலம் மிக சுலபமாக வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். எப்படி செய்வது? வாங்க இதை எப்படி செய்வது என்று பாப்போம்.

Print
No ratings yet

வெங்காயத்தாள் பொரியல் | Spring Onion Stir Fry In Tamil

நிறைய பேருக்கு வெங்காயத்தாள் வைத்து பொரியல்செய்யலாம் என்று தெரியாது. வெங்காயத்தாள் என்றாலே சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த கலவை சாதத்தைசெய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்புபண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.சூப்பரான வெங்காயத்தாள்பொரியல் செய்வதும் சுலபம். பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் துரிதஉணவு வகையில் வரும் சுவையை இந்த வெங்காயத்தாள் சமையல் மூலம் மிக சுலபமாக வீட்டிலேயேசுலபமாக செய்யலாம். எப்படி செய்வது? வாங்க இதை எப்படி செய்வது என்று பாப்போம்.
Prep Time3 minutes
Active Time5 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Spring Onion Stir Fry
Yield: 3
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் சின்ன வெங்காயம்
  • 1 கப் வெங்காய தாள்
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • கறிவேப்பலை தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு,
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பலைபோட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்.
  • அடுத்து வெங்காயம்cநன்றாக வதங்கிய பின்னர் வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்தcதாள்விரைவில் வெந்து விடும்.
  • பிறகு ஐந்துநிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம்கழித்து இறக்கவும்.
  • சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Fat: 8g | Saturated Fat: 1.6g | Potassium: 381mg | Fiber: 4g

இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் டீக்கடை வெங்காய வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!