அசைவத்தை பொறுத்த வரைக்கும் மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் முட்டை கனவா அப்படின்னு இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு சிலர் இதில் இருக்கிற எந்த அசைவ உணவு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா ஒரு சிலருக்கு இதில் இருக்கிற அசைவத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிடிக்கும். இதுல இருக்கிற மட்டன் சிக்கன் நண்டு இறால் அப்படின்னா எல்லாத்துலயும் குழம்பு செஞ்சாலும் நல்லா இருக்கும் ஃப்ரை செய்தாலும் நல்லா இருக்கும்.
ஆனா கனவா மீன் பொருத்தவரைக்கும் அதுல குழம்பு வைக்கிறது விட தொக்கும் கனவா 65வும் செஞ்சா டேஸ்ட் அல்டிமேட் ஆ இருக்கும். ஒரு சிலருக்கு தான் இந்த கனவா மீன் சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கனவா மீன் தொக்கு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இப்ப நம்ம செய்ய போற மாதிரி கனவா மீன் தொக்கு செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க பழைய ரெசிபியை மறந்துட்டு இப்போ நம்ம செய்ய போற இந்த ரெசிபியை தான் ஞாபகம் வச்சுக்கிட்டு எப்பவுமே கனவா மீன் எடுக்கும் போது செய்வீங்க.
காரணம் இந்த கனவா மீன் தொக்கோட டேஸ்ட். இந்த கனவா மீன் தொக்க சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது வேற லெவல் டேஸ்டா இருக்கும். அது சொல்லும்போது தெரியாது நீங்க ஒரு தடவை செஞ்சு அந்த மாதிரி சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டு பாருங்க அப்போ தெரியும் உங்களுக்கு அதோட டேஸ்ட் என்னன்னு. இந்த கனவா மீன் தொக்கு செய்வது ரொம்ப பெரிய விஷயம் அப்படின்னு எல்லாம் நினைக்காதீங்க ரொம்பவே ஈஸியா அதே நேரத்துல ரொம்பவே டேஸ்டா இத செஞ்சி முடிச்சிடலாம்.
நம்ம வீட்ல இருக்கிற பொருட்கள் மட்டுமே போதுமானது. இதுல மிளகுத்தூள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்து செய்றதால உங்களுக்கு இருமல் சளி இருந்தா கூட சீக்கிரத்திலேயே குணமாகிடும் அந்த அளவுக்கு ஒரு காரசாரமான கனவா தொக்கு தான் இது. ஒரு தடவ மட்டும் இத ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சூப்பரான கனவா மீன் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
கனவா மீன் தொக்கு | Squid Fish Thokku Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ கனவா மீன்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- சிறிய துண்டு இஞ்சி
- 4 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் சீரக தூள்
- 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 சிறிய கைப்பிடி கொத்தமல்லிஇலைகள்
செய்முறை
- முதலில் கணவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்
- பிறகு இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக தட்டி சேர்த்துக் கொள்ளவும்
- அனைத்து நன்றாக வதங்கி பிறகு தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்
- தக்காளியும் வதங்கிய பிறகு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு கழிவை வைத்துள்ள கனவா மீன்சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை. கனவாயிலிருந்து நிறைய தண்ணீர் வெளிவரும்.
- பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சுருள வதக்க வேண்டும்.
- பிறகு மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கிய பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகள்சேர்த்து இறக்கினால் சுவையான கனவா மீன் தொக்கு தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : இந்த வார இறுதியை ஸ்பெஷலாக்க மீன் வாங்கி இப்படி கோதாவரி மீன் குழம்பு ட்ரை பண்ணி பாருங்க!