சரஸ்வதி பூஜை  எப்படி செய்ய வேண்டும் ? எந்த நேரத்தில் செய்யவேண்டும்? நெய்வேத்தியம் என்ன செய்வது?

- Advertisement -

நவராத்திரி விழாவின் கடைசி நாள் தான்  சரஸ்வதி பூஜை அல்லது ஆயுதபூஜை. வருடம் முழுவதும் நமக்காக உழைத்த நாம் வேலை செய்து நமக்கு வருமானம் ஈட்டுவதற்கு உதவி புரிந்த ஆயுதங்களுக்கு கல்வி அறிவை கொடுத்த புத்தகத்திற்கு நன்றி கூறுவது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் கல்வியை மட்டும் இழக்கக்கூடாது. அத்தகைய கல்விக்கு வருடத்தில் ஒருமுறை சரஸ்வதி தேவியை நினைத்து பூஜித்து அருளையும் ஞானத்தையும் பெறுவதற்காக கொண்டாடப்படுவது தான் சரஸ்வதி பூஜை. “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதை நாம் உணர செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு நல்ல பலன்களையும் நாம் வாழும் வாழ்க்கை வருமானத்தையும் கொடுக்கக் கூடிய தொழிலே நமக்கு தெய்வமாகையால் நாம் செய்யும் தொழிலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும் சரஸ்வதி பூஜை அன்று பூஜித்து வருடம் முழுதும் நமக்காக உழைக்கும் அவைகளுக்கு  நன்றி கூறி வரும் நாட்களும் இதே போல் உதவ வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

-விளம்பரம்-

நவராத்திரி என்பது தாய் மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுகிறார் பத்தாவது நாள் தாயின் வெற்றியை தேவர்கள் கொண்டாடுகிறார்கள் . தாயின் அம்பிகை மகிஷாசுரடன் எட்டு நாளில் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுவதை நவராத்திரி தினங்கள் என்று அழைக்கின்றார்கள். இந்த நவராத்திரியின் தினத்தில் ஒன்பதாவது நாள் அன்று நாம் நம் வீட்டில் சரஸ்வதி தேவியை ஆவாகனம் செய்து நல்ல கல்வி அறிவும், குழந்தைகளுக்கு ஞானமும், படிப்பவர்களுக்கு கல்வி அறிவும், வேலையில் சிறந்து விளங்குவதற்கான திறமையும், அறிவையும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதே இந்த சரஸ்வதி பூஜையாகும். இந்த ஆயுத பூஜை அன்று நம் வேலைக்கு உதவும் உபகரணங்களுக்கெல்லாம் நன்றி கூறி அவைகளை தெய்வமாக வழிபட்டு அவர்களுக்கு பூஜைகள் செய்து வழிபடுவது ஆயுத பூஜையின் முக்கிய சிறப்பு அம்சமாகும்.

- Advertisement -

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பதற்கு இணையாக நாம் செய்யும் தொழிலுக்கு உபயோகப்படும் உபகரணங்களை எல்லாம் இறைவனுக்கு முன்பாக வைத்து வழிபட்டு மென்மேலும் உபகரணங்கள் நமக்கு உதவியாக இருக்கவும். நம் வேலையில் முன்னேற்றமடைந்து நாம் வாழ்வில் உயர்வதற்கும் சரஸ்வதி தேவியிடம் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த ஆயுத பூஜையில் நாம் இறைவனுக்கு முன்பு நம் வேலைக்கான உபகரணங்களையும் கல்வி படிக்கும் குழந்தைகளின் புத்தகங்களும் வைத்து பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

எப்படி பூஜைக்கு தயார் ஆக வேண்டும்?

நவராத்திரியின் ஒன்பது தினங்கள் நாம் பூஜை செய்ய இயலாவிட்டாலும் இந்த சரஸ்வதி பூஜை அன்று நாம் நிச்சயமாக வழிபடுவது அனைவரது இல்லத்திலும் வழக்கமாக இருக்கும். பூஜை அறையை அலங்காரம் செய்து நம் கல்விக்கும் தொழிலுக்கும் உதவும் உபகரணங்களை எல்லாம் சுத்தம் செய்து அவர்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்து பூஜை அறையில் தயார் செய்து வைக்க வேண்டும்.

எப்போது வழிபாடு செய்ய வேண்டும்?

வழிபாடு செய்யும்பொழுது ராகு காலம் எமகண்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் இந்த வருடம் 23.10.2023 திங்கட்கிழமை அன்று ஆயுத பூஜை வருகிறது. திங்களன்று காலை 9 மணி முதல் 10:30 மணி வரையிலும் மதியம் 12 மணிக்கு மேல் 1:30 மணி மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரையிலும் அல்லது 8:30 மணி முதல் 9 மணி வரையிலும் பூஜைகளை செய்யலாம்.

-விளம்பரம்-

பூஜைக்கான நெய்வேத்தியங்கள் என்ன வைக்கலாம்?

இந்த பூஜைக்கான நெய்வேத்தியங்களாக அம்பாளுக்கு விருப்பமான சுண்டல் ,புளியோதரை சர்க்கரை பொங்கல், அவல்பொறி, பழங்கள், தேங்காய் போன்றவற்றை நெய்வேத்தியம் செய்யலாம் .மேலும் அனைத்து அலங்காரங்கள் நெய்வேத்திய பொருட்கள் தொழில் செய்வதற்கான உபகரணங்கள் கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் என அனைத்தையும் வைத்து தூப தீப ஆராதனை காட்டி பூஜை செய்து தாயின் மனதை மகிழ்வித்து கல்வியிலும் , தொழிலிலும் சிறந்து விளங்க அருள் புரிய வேண்டும் என்று அன்னையிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இனி வரும் இந்த வருடத்தில் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுவதற்கு அன்னையின் அருள் கிடைக்க அன்னையை மனதார பிரார்த்தித்துக் கொள்ளவோம்.