சுவையும் பாரம்பரியமும் நிறைந்த தக்கடி இலங்கையில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இது ஒரு பொதுவான காலை உணவு தயாரிப்பாகும். அரிசி மாவுடன் சுவையான உருண்டைகளை (கொழுக்கட்டை) செய்து, காரமான இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்படும், பொதுவாக ஆட்டிறைச்சி எலும்புகளுடன் கூடிய பெரிய இறைச்சி துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன,
இதையும் படியுங்கள் : மொறு மொறுவென உருளைக்கிழங்கு மெதுவடை செய்வதுை எப்படி ?
ஏனெனில் அவை அதிக சுவையுடன் இருக்கும் கிரேவியுடன் மட்டன் கறி தயாரிக்கப்பட்டதும், அரிசி மாவு-தேங்காய் உருண்டை கறியில் விடப்படும்.குழம்பு சமைக்கும் போது, உருண்டைகள் கறி சுவைகளை உறிஞ்சி, ஆட்டிறைச்சி கறியின் அனைத்து சுவைகளுடன் மிருதுவான தக்கடி தயாராகின்றன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலங்கை தக்கடி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த இலங்கை தக்கடி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இலங்கை தக்கடி| Sri Langan Thakkadi Receipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- ½ cup அரிசி மாவு
- 25 சின்ன வெங்காயம்
- 3 பெரிய வெங்காயம்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 5 பச்சை மிளகாய்
- 2 cup துருவிய தேங்காய்
தேங்காய் மசாலாவிற்கு
- ½ kg மட்டன் எலும்புடன்
- ½ இஞ்சி பூண்டு
- 1 வெங்காயம்
- 4 tsp மசாலா பொடி
- 3 tsp மிளகாய் தூள்
- 3 tbsp தேங்காய் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- கறிவேப்பிலை இலை
செய்முறை
- முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, கறிவேப்பிலையுடன் தாளிக்கவும்.
- பின்பு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். மட்டனை சேர்த்து உப்பு, மிளகாய் தூள், மசாலா பொடி சேர்த்து வதக்கவும். 15 நிமிடம் அப்படியே வேக விடவும்.
- பின்பு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். மூடி போட்டு குறைந்த தணலில் வேக விடவும். வேகும் வரை தக்கடி உருண்டைகளை தயார் செய்ய வேண்டும்.
- பின்னர் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை இலை, தேங்காய், உப்பு சேர்த்து வைக்கவும்.
- இதோடு கொதிக்கும் ஆணம் (குழம்பு) 2 டேபிள் ஸ்பூன் மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து பிசையவும். பின்பு பூ போன்று உருண்டைகளாக பிடிக்கவும். அழுத்தி பிடிக்க கூடாது.
- அதன் பிறகு இப்படி எல்லா மாவையும் பிடித்து வைக்கவும். பின் கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் கவனமாக உருண்டைகளை போடவும்.
- பிறகு 10 நிமிடம் கழித்து சிம்மில் வைத்து விடவும். இப்பொழுது பிறட்டி விட்டு மீன்டும் 20 நிமிடம் வேக விட்டு எடுத்து பரிமாறவும். சுவையான பாரம்பரிய தக்கடி தயார்.