Home ஸ்நாக்ஸ் கிராமத்து சக்கரைவள்ளி கிழங்கு கொழுக்கட்டை ஒரு முனை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

கிராமத்து சக்கரைவள்ளி கிழங்கு கொழுக்கட்டை ஒரு முனை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

உருளைக்கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு மரவள்ளி கிழங்கு வெத்தல வள்ளி கிழங்கு கருணைக்கிழங்கு சேப்பக்கிழங்கு சேனைக்கிழங்கு அப்படின்னு கிழங்கு வகைகள் நிறைய இருந்தாலும் நம்ம அடிக்கடி பயன்படுத்துற கிழங்கு அப்படின்னா அது உருளைக்கிழங்கும் சர்க்கரைவள்ளி கிழங்கும் தான். இதுல சக்கரை வள்ளி கிழங்கு ரொம்பவே இனிப்பா அப்படியே சாப்பிடுறதுக்கு ரொம்பவே அருமையா நம்ம விதவிதமா நிறைய கொழுக்கட்டை செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு கொழுக்கட்டையை செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு அதோட சுவை ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

சில குழந்தைகளுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு அப்படியே சாப்பிடுவதற்கு பிடிக்காது அவங்க எல்லாருக்கும் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு வச்சு ஒரு கொழுக்கட்டை செஞ்சு பாருங்க. சுவை ரொம்பவே அருமையா இருக்கும். ஒரு தடவை நீங்க இதை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இதை செய்வீங்க. அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். குழந்தைங்க ஈவினிங் டைம்ல ஏதாச்சும் ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா இந்த ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டையை செஞ்சு கொடுங்க.

கண்டிப்பா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு வச்சு நம்ம என்னதான் நிறைய ஸ்நாக்ஸ் ரெசிப்பிஸ் பார்த்திருந்தாலும் இந்த கொழுக்கட்டை ரொம்பவே ஆரோக்கியமானது. அதனால கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் ஒரே ஒரு தடவை இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

சர்க்கரை வள்ளி கொழுக்கட்டை | Sweet Potato Kozhukattai

சில குழந்தைகளுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு அப்படியே சாப்பிடுவதற்கு பிடிக்காது அவங்க எல்லாருக்கும் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு வச்சு ஒரு கொழுக்கட்டை செஞ்சு பாருங்க. சுவை ரொம்பவே அருமையா இருக்கும். ஒரு தடவை நீங்க இதை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இதை செய்வீங்க. அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். குழந்தைங்க ஈவினிங் டைம்ல ஏதாச்சும் ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா இந்த ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டையை செஞ்சு கொடுங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Sweet Potato Kozhukattai
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 2 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் பட்டைதூள்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதன் தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும் அதனுடன் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  • ஒரு கடாயில் தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
  • பிறகு அதனுடன் பட்டைத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்போது பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறு உருண்டையை எடுத்து நன்றாக விரித்துக் கொள்ளவும் அதில் கலந்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்துக் கொள்ளவும்
  • ஒரு தோசை கல்லில் சிறிதளவு நெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ளதை அதில் வைத்து நன்றாக இருப்பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கொழுக்கட்டை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : சுவையான டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் மிகவும் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்தது!