தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் நம்ம வீட்டுல வந்தாலே நம்ம நிறைய இனிப்பு பலகாரங்களும் கார பலகாரங்களும் செய்வோம். அதிரசம் ,முறுக்கு, சுய்யம், கலகலா, வடை, அப்பம், குலோப் ஜாமுன், ரசகுல்லா, அப்படின்னு எக்கச்சக்கமான உணவுகளை சொல்லிக்கிட்டே போகலாம் அந்த அளவுக்கு நம்ம வீட்ல நிறைய பலகாரங்கள் நம்ம செய்வோம். ஆனா இப்போ எல்லாம் நம்ம வீட்ல இனிப்பு சீடை பெருசா யாரும் செய்றதில்லை. காரணம் இனிப்பு சீடை செய்வதற்கான பக்குவம் நிறைய பேருக்கு தெரிவது இல்லை.
இந்த இனிப்பு சீடை மொறு மொறுன்னு இனிப்பா செஞ்சி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா ஒரு சிலர் மட்டுமே இதை பக்குவமா செய்வாங்க. அந்த காலத்துல எல்லாம் எல்லார் வீட்டுலயும் அதிரசமும் சீடையும் கண்டிப்பா விசேஷங்கள் அன்னைக்கும் பண்டிகை அன்னைக்கும் செய்வாங்க. இப்பதான் அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே வருது. நம்மளும் பக்குவமா இந்த இனிப்பு சீடைய வீட்ல செஞ்சு சாப்பிடலாம். இதோட சுவையும் அந்த காலத்துல நம்ம பாட்டி கையாள சாப்பிட்ட அதே சுவையுடன் தான் இருக்கும். இனிப்பு சீடை மாவு அரைச்சு வறுத்து அதை பிசைஞ்சு பக்குவமா எப்படி செய்வது என்று இப்ப நம்ம பாக்க போறோம்.
குழந்தைகளுக்கு இதை ஸ்கூலுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து விட்டா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல வேலை பாக்குறவங்களும் கூட அப்பப்ப ஒன்னு ரெண்டு எடுத்து வாயில போட்டுக்கிட்டு ஜாலியா வேலை பார்க்கலாம். அந்த அளவுக்கு பாரம்பரியமான சுவையான ஒன்னு தான் இந்த இனிப்பு சீடை. இப்ப வாங்க முறுமுறுப்பான இனிப்பான இந்த இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இனிப்பு சீடை | Sweet Seedai Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 1 கப் துருவிய வெல்லம்
- 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1 டீஸ்பூன் எள்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி ஒரு சுத்தமான துணியில் போட்டு நிழலில் நன்றாக காய வைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் சலித்த மாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் சேர்த்து அதனுடன் தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சவும்
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் சிறிது வெல்லக்கரைசலை எடுத்து போட்டு அது உருண்டையாக வரும் அளவிற்கு வெல்லப்பாகை காய்ச்சிக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள மாவு வெல்லப்பாகு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- ஒரு கடாயில் எள் சேர்த்த பொறிந்த உடனே மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.தேங்காய் துருவல் மற்றும் உளுந்தம் மாவு இது இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
- ஒரு மணி நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக வைத்து பொரித்து எடுக்கவும் .அனைத்து மாவுகளையும் இதே மாதிரி குறித்து எடுத்தால் சுவையான இனிப்பு சீடை மொறுமொறுப்பாக தயார்.