Home உடல்நலம் காலை எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருந்தால் பிபி இருக்குறது என்று அர்த்தமாம்!

காலை எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருந்தால் பிபி இருக்குறது என்று அர்த்தமாம்!

மறதி காரணங்கள் மோசமான வாழ்க்கை முறை ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்க வழக்கங்கள் தேவையில்லாத குழப்பங்கள் மன அழுத்தங்கள் இவை அனைத்தும் தான் உயர் ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள். நீரிழிவு நோய் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே உயிரை கொல்கின்ற அளவிற்கு ஆபத்துடைய இந்த உயர் ரத்த அழுத்தத்தை நாம் ஆரம்பத்திலேயே பார்த்து சரியாக்க வேண்டும். உலகம் முழுவதிலும் நடக்கின்ற பலவிதமான இறப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த உயர் ரத்த அழுத்தமே காரணமாக உள்ளது. ஆரம்பத்திலேயே இதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த உயர் ரத்த அழுத்தத்திற்கான ஆரம்ப அறிகுறிகளாக காலை எழுந்ததும் நமக்கு ஏற்படும் சில அறிகுறிகள் சொல்லப்படுகிறது. அந்த சில காலை அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

உயர் ரத்த அழுத்தத்திற்கான காலை அறிகுறிகள்

காலை தூங்கி எழுந்து படுக்கையில் இருந்து எழும்போது தலை சுற்றுவது போல இருந்தால் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது உயர் ரத்த அழுத்தத்திற்கு தலை சுற்றல் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் எனவே ஆரம்பத்திலேயே அதை பார்க்க வேண்டும்

காலை எழுந்ததும் பல் துலக்கி விட்டு நாம் முதலில் தண்ணீர் தான் குடிப்போம் அது நம் உடலையும் குடலையும் சுத்தம் செய்யும். ஆனால் காலை எழுந்தவுடன் அதிகமாக தண்ணீர் தாகம் எடுத்தால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் கண் பார்வையை பாதிக்கும் எனவே காலை எழுந்தவுடன் கண்பார்வை மங்கலாக தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ள கூடாது

இரவு நேரத்தில் தூக்கம் வராமல் நீங்கள் சிரமப்பட்டால் அதுவும் ரத்த அழுத்தத்திற்கான ஒரு காரணம் தான். இரவு நேரத்தில் தூக்கமின்மையால் காலை எழுந்ததிலிருந்து உங்களுக்கு சோர்வாக காணப்படும் எனவே உடனே மருத்துவரை அணுகி இதனை சரியாக்கி கொள்ளவும்

-விளம்பரம்-

காலை எழுந்ததும் வாந்தி மற்றும் குமட்டல் வந்தால் அதற்கு நிறைய காரணங்கள் உண்டு ஆனால் உயர் ரத்த அழுத்தமும் ஒரு காரணம் தான் எனவே அதனை லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்