டீ போட்ற கேப்ல 5 நிமிஷத்துல மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்! இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ஸ்நாக்ஸ் ரெடி!

- Advertisement -

மரவள்ளிக்கிழங்கை வைத்து எந்த ரெசிபியை செய்தாலும், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுடைய வீட்டில் இருக்கும் மிகக் குறைந்த பொருட்களை வைத்தே, சுலபமான முறையில், சுவையான மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். கொஞ்சம் பொறுமையாக பக்குவமாக பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் போட்டால் எல்லோருக்கும் ஒரு கிறிஸ்டியான சூப்பர் ஸ்னாக்ஸ் சிப்ஸ் கிடைக்கும்

-விளம்பரம்-

சிப்ஸ் என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு சிப்ஸ் தான் சாப்பிட சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருக்கும் என அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மரவள்ளிக்கிழங்கு செய்யப்படும் சிப்ஸ் அதை விட நல்ல சுவையிலும் மொறு மொறுப்பாகவும் இருக்கும். அதை செய்ய வேண்டிய முறையில் பக்குவமாக செய்தால் உருளைக்கிழங்கு சிப்ஸ் விட இந்த மரவள்ளிக்கிழங்கு வைத்தும் அருமையாக ஒரு சிப்ஸ் தயார் செய்து விடலாம்.இந்த மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எல்லா வெரைட்டி ரைஸ்கும் தொட்டுக்கொள்ள சூப்பரா இருக்கோங்க. புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சாம்பார்சாதம், புதினா சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். ஆஹா அருமையான ருசி.மொறு மொறுன்னு சூப்பரான மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. அதை எப்படி என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -
Print
No ratings yet

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் | Tapioca chips Recipe In Tamil

சிப்ஸ் என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் தான். உருளைக்கிழங்குசிப்ஸ் தான் சாப்பிட சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருக்கும் என அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மரவள்ளிக்கிழங்கு செய்யப்படும் சிப்ஸ் அதை விட நல்ல சுவையிலும்மொறு மொறுப்பாகவும் இருக்கும். அதை செய்ய வேண்டிய முறையில் பக்குவமாக செய்தால் உருளைக்கிழங்குசிப்ஸ் விட இந்த மரவள்ளிக்கிழங்கு வைத்தும் அருமையாக ஒரு சிப்ஸ் தயார் செய்து விடலாம்.இந்தமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எல்லா வெரைட்டி ரைஸ்கும் தொட்டுக்கொள்ள சூப்பரா இருக்கோங்க.புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சாம்பார்சாதம், புதினா சாதம் இவைகளுக்குதொட்டு சாப்பிட்டு பாருங்கள். ஆஹா அருமையான ருசி.மொறு மொறுன்னு சூப்பரான மரவள்ளிக்கிழங்குசிப்ஸ் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. அதை எப்படி என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Tapioca chips
Yield: 3
Calories: 64kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 மரவள்ளிக்கிழங்கு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 cup எண்ணெய்

செய்முறை

  • கிழங்கின் தோலை நீக்கவும். பின் அவற்றை மெல்லிய தகடுகளாக அரிவாய் மனையில் நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெயைக் காயவைக்கவும்.
  • கிழங்கை 2 அல்லது 3 முறை அதிலிருக்கும் பால் போகுமாறு தண்ணீரில் அலசி எடுத்து நீர் வடிந்ததும். சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு சிவந்து விடாமல் பார்த்து, மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும். (அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்).
  • சிறிது சூடு ஆறியதும் சிப்ஸின் மேல் மிளகாய்தூள் உப்பு தூவி குலுக்கிவிடவும்.
  • சுவையான மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் தயார்.
  • இதை டப்பாக்களில் போட்டு மூடி வைத்தால் தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம்

Nutrition

Serving: 500g | Calories: 64kcal | Carbohydrates: 5.4g | Protein: 7g | Fat: 0.2g | Potassium: 296mg | Fiber: 6.5g | Vitamin A: 471IU | Vitamin C: 84mg | Calcium: 19mg | Iron: 0.4mg