லட்டு அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். கடைகளில் கிடைக்கிற விதவிதமான லட்டுக்கு நிறைய பேர் அடிமையாகவே இருப்பாங்க. அப்படி லட்டைவீட்ல செய்து சாப்பிடணும்னு ஆசை நிறைய பேருக்கு இருக்கும். கடையில் போய் வாங்கணுமா அப்படினு நினைக்கிறீங்களா உங்களுக்கு தான் இந்த ரெசிபி. காரணம் நம்ம பூந்தி லட்டு செய்வோம் அப்படின்னு சொல்லிட்டு பூந்தி ரெடி பண்ணி பாகு காய்ச்சி என்ன என்னவோ பண்ணி பார்த்தாலும் கடையில் வர மாதிரி லட்டு அழகா வரவே வராது ஆனால் டேஸ்ட் மட்டும் இருக்கும்.
ஆனால் லட்டு அப்படிங்கறது டேஸ்ல மட்டும் கிடையாது அது பார்க்கிற சைஸ்லையும் இருக்கு அதுக்காகவே இந்த மாதிரி ஈஸியா ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும். இந்த லட்டு எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இது எந்த கடையில வாங்கினீங்க அப்படின்னு கேட்கிற அளவுக்கு அந்த லட்டு அவ்ளோ சுவையா இருக்கும். இந்த சுவையான ஈஸியான லட்டை நாம் எப்போதும் போல செய்யும் அதே பொருட்களில் தான் செய்யப்போறோம். ரொம்ப ரொம்ப குறைஞ்ச வேலை தான் ஈஸியா முடிஞ்சிரும் இந்த லட்டு.
இந்த லட்டு செய்யறதுக்கு ரொம்பவே டைம் எடுக்காது கடலை மாவு கரைத்தமா மாவு எண்ணெயில் பொரிச்சமா பாகு வச்சமா கலந்தமா உருட்டனோமா அப்படின்னு மூணு வேலையை சிம்பிளா செய்திட்டு டக்குனு எடுத்து லட்டு வாயில போட்டுட்டு போயிட்டே இருக்கலாம். அது மட்டும் இல்லாம செய்து வச்ச லட்டு எல்லாம் அன்னைக்கே காலியாயிடுற அளவுக்கு ரொம்ப வே ருசியா இருக்கும் இந்த ஈஸியான லட்டு. சரி வாங்க எப்படி இந்த ஈஸியான லட்டு செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஈஸியான பூந்தி லட்டு |Easy Boondi Laddu Recipe in Tamil
Equipment
- 2 கடாய்
- 1 மிக்ஸி
- 2 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலைமாவு
- 3/4 கப் சர்க்கரை (சீனி)
- 3 ஏலக்காய்
- சிறிதளவு முந்திரி
- சிறிதளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கடலை மாவு , உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு லேசாக ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கப் மாவிற்கு கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தோசை மாவு பதத்தில் உள்ள கடலை மாவை ஜூஸ் வடிகட்டியில் ஊற்றி லேசாக வடிகட்டியை ஆட்டினால் நீள நீளமாக மாவு எண்ணெயில் விழும் அவை வெந்த உடனே எடுத்து விட வேண்டும்.
- ஒரு மொறுமொறுப்பாக வேகவிடக்கூடாது. பின்பு பொரித்து எடுத்து வைத்துள்ள கடலைமாவு சேவு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் சீனி சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து ஒரு பாகுபதம் வரும் வரை நன்றாக கலந்து விட வேண்டும்.
- சீனி பாகு பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பொடித்து வைத்துள்ள கடலை கடலை மாவு சேவை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் பாகோடு சேர்ந்து கட்டியாகி வந்துவிடும்.
- பிறகு அதில் ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு கை சூடு பொறுக்க அளவு வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிட கொடுத்தால் சுவையான ஈஸி லட்டு தயார்.