அடுத்தமுறை மட்டன் வாங்கினால் இப்படி சுக்கா செய்து பாருங்கள்! ரசம், சாம்பார் இருந்தாலே ருசிக்க ருசிக்க சாப்பிட்டு விடலாம்!

- Advertisement -

Non veg அப்படின்னாலே எல்லாருக்கும் வெஜ் விட ரொம்ப பிடிக்கும் காரணம் என்னதா காய்கறிகள்ல நிறைய சத்துக்கள் இருந்தாலும் non veg காரசாரமா செய்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும் அதனால பெரும்பாலும் காய்கறிகளை விட மட்டன் சிக்கன் போன்ற அசைவ உணவுகள் தான் விரும்புவாங்க..

-விளம்பரம்-

அந்த வகையில நம்ம மட்டன் சுக்கா எப்படி செய்றதுனு தான் இப்ப பாக்க போறோம் மட்டன் கிரேவி மட்டன் சூப் மட்டன் பிரியாணி னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.ஆனால் வித்தியாசமான முறையில் செய்ற இந்த மட்டன் சுக்கா ரொம்பவே சுவையா இருக்கும்.

- Advertisement -

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. தயிர் சாதம் தக்காளி சாதம் போன்ற வெரைட்டியான சாதங்களுக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் தா இந்த அருமையான மட்டன் சுக்கா ஆரோக்கியமும் சுவையும் அதிகமா இருக்க இந்த மட்டன் சுக்கா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்..

Print
5 from 1 vote

மட்டன் சுக்கா | Mutton Chukka Recipe In Tamil

நம்ம மட்டன் சுக்கா எப்படி செய்றதுனு தான் இப்ப பாக்க போறோம் மட்டன் கிரேவி மட்டன் சூப் மட்டன்பிரியாணி னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.ஆனால் வித்தியாசமான முறையில்செய்ற இந்த மட்டன் சுக்கா ரொம்பவே சுவையா இருக்கும். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. தயிர் சாதம் தக்காளி சாதம்போன்ற வெரைட்டியான சாதங்களுக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் தா இந்த அருமையான மட்டன்சுக்கா ஆரோக்கியமும் சுவையும் அதிகமா இருக்க இந்த மட்டன் சுக்கா எப்படி செய்றதுன்னுவாங்க பார்க்கலாம்..
Prep Time5 minutes
Active Time20 minutes
Course: LUNCH, starters
Cuisine: tamil nadu
Keyword: mutton chukka
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ எலும்பில்லாத மட்டன்
  • 2 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 25 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • ஒரு கிலோ எலும்பில்லாத மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள், சீரகத்தூள், அரை எலுமிச்சம் பழத்தின் சாறு, இஞ்சி பூண்டுவிழுது என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்
     
  • 30 நிமிடங்களுக்குபிறகு ஒரு குக்கரில் கலந்து வைத்துள்ள மட்டனை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிநாலைந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணையை சேர்த்து அதில் எடுத்து வைத்துள்ள 25 சின்ன வெங்காயத்தை சேர்த்துஇரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கலந்த பிறகு கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளவும்
     
  • இப்பொழுது வேக வைத்துள்ள மட்டனை அகலமான கடாயில் சேர்த்து மட்டனில் உள்ள தண்ணீர் எல்லாம் சுண்டும் அளவிற்கு நன்றாக பத்து நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்
  • இறுதியாக மெழுகு தோலை சேர்த்து இறக்கினால் அருமையான மட்டன் சுக்கா தயார் . இதனை தயிர்சாதம் தக்காளி சாதம் சாம்பார் ரசம் போன்றவற்றுடன் பரிமாறினால் சுவை பிரமாதமாக இருக்கும்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : ருசியான  மட்டன் வெங்காய மசாலா இப்படி தான் இருக்கனும்! இதன் ருசியே தனி ருசி தான்!