தைப்பூசம் அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள்! வீட்டின் வறுமையை போக்கும் தைபூசம்!

- Advertisement -

முருகனுக்கு ஏற்ற நிறைய விசேஷங்கள் இருந்தாலும் தைப்பூசம் ஆனது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. தைப்பூசம் அன்றை முருகப்பெருமான் அவதரித்த நாளாக சொல்லப்படுகிறது எனவே அந்த நாளில் முருகப்பெருமானை நினைத்து நாம் விரதம் இருந்து வழிபட்டால் நாம் நினைத்ததெல்லாம் கிடைக்கும். தைப்பூசம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலுமே மிகச்சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படும். இந்த வருடம் தைப்பூசம் ஜனவரி 25ஆம் தேதி வருகிறது. அன்றைய நாளில் தைப்பூசம் மட்டுமில்லாமல் தை பௌர்ணமையும் சேர்ந்து வருவதால் இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. தைப்பூசம் அன்று நம் வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய ஒரு மூன்று பொருட்களை பற்றி பார்க்கலாம்.

-விளம்பரம்-

இந்த வருட தைப்பூசமானது வியாழக்கிழமை வருவதால் அன்று குரு பகவானுக்கு உகந்த நாளாக உள்ளது. தைப்பூசம் அன்று முருகப் பெருமானை மட்டும் அல்லாமல் சிவபெருமானையும் குரு பகவானையும் சேர்த்து வணங்கினால் மிகவும் சிறப்பானது. மேலும் வள்ளல் பெருமானையும் வணங்கி ஒரு மூன்று பேருக்கு அன்னதானம் வழங்கினால் மிகவும் சிறப்பானது. குரு பகவான் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தில் அவதரித்தார் அன்றைய நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் குரு பகவானுக்கும் மிகவும் உகந்த நாளாக உள்ளது.

- Advertisement -

தைப்பூசம் அன்று நாம் முருகனை நினைத்து வழிபட்டு விரதம் இருந்தால் கடன் பிரச்சினைகள் நிலப்பிரச்சினைகள் பல பிரச்சினைகள் நோய் சம்பந்தமான பிரச்சனைகள் குழந்தை வரம் என அனைத்துமே நமக்கு கிடைக்கும். நமக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். தைப்பூசம் அன்று முருகப்பெருமானை மட்டும் இல்லாமல் முருகப்பெருமானின் வேலையும் வழிபட்டால் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் முருகப் பெருமானின் அன்னை பார்வதி தேவி தைப்பூசம் அன்று தான் முருகப்பெருமானுக்கு வேலை வழங்கியதாக வரலாறு உள்ளது.

தைப்பூசம் அன்று வீட்டில் வாங்கி வைக்கக்கூடிய மூன்று பொருட்கள்

தைப்பூசம் அன்று நம் வீட்டில் இந்த மூன்று பொருட்களையும் வாங்கி வைத்தால் நம் வீட்டிற்கு மிகவும் நல்லது. அதில் முதலாவது பொருள் கல் உப்பு, தைப்பூசம் என்று இந்த கல் உப்பை வைத்து முருகப்பெருமானை வழிபட்டால் மிகவும் சிறப்பானது. இரண்டாவது பச்சரிசி தைப்பூசம் அன்று இந்த பச்சரிசியை நாம் வாங்கி வைத்து வழிபட்டால் நம் வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். மூன்றாவது எலுமிச்சை பழம் உங்கள் வீட்டில் வேலை இருந்தால் அந்த வேலையை அலங்கரித்து அதில் இந்த எலுமிச்சை பழத்தை குத்தி வைக்கலாம் அல்லது வேலை இல்லை என்றால் எலுமிச்சம் பழத்தை இரண்டாக பெட்டி ஒரு பக்கம் மஞ்சளும் ஒரு பக்கம் குங்குமமும் தடவி வீட்டின் நிலை வாசலில் வைத்துவிடலாம். அப்படி செய்தால் மிகவும் நல்லது. இந்த மூன்று பொருட்களையும் வைத்து தைப்பூசம் என்று வழிபட்டால் நாம் நினைத்ததெல்லாம் நடக்கும்.

முருகனை வழிபடும் முறை

தைப்பூசத்திற்கு முன் தினமே வீட்டை நான்கு சுத்தம் செய்து பூஜை அறையையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தைப்பூசம் அன்று காலைகள் எழுந்து குளித்துவிட்டு நெற்றிகள் திருநீர் பூசிக்கொண்டு முதல் வேலையாக முருகப்பெருமானின் வேலுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். முதலில் சுத்தமான தண்ணீரில் வேலை நன்றாக கழுவி விட்டு பின்னர் பால் அல்ல அபிஷேகம் செய்ய வேண்டும் அதன் பிறகு பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்து முடித்த பின்பு உங்கள் வீட்டில் வெள்ளி பித்தளை அல்லது செம்பு கிண்ணங்கள் இருந்தால் அதில் ஏதாவது ஒன்றை பச்சரிசியை நிரப்பி அதில் வேலை வைத்து வேலுக்கு அலங்காரம் செய்து வழிபட வேண்டும். மேலும் வழி படும் பொழுது முருகப்பெருமானுக்கு நெய்வேதியமாக சர்க்கரை பொங்கல் அல்லது பால் பாயாசம் செய்து வைக்கலாம். நாம் இவ்வாறு முருகப் பெருமானை வழிபட்டால் நம் வீட்டில் வறுமை நீங்கி நாம் நினைத்ததெல்லாம் நடக்கும் வீட்டில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களும் இந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் அவர்களுக்கு மிகுந்த நன்மை கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : தைப்பூசம் அன்று முருகனுக்கு இருக்க வேண்டிய விரதம் மற்றும் அதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?