சுவையான தக்காளி சட்னி செய்வது!

தக்காளி சட்னி
- Advertisement -

தக்காளி சட்னி, பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சட்னி, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். தக்காளி சட்னியின் நிறம், காரம் மற்றும் அதன் புளிப்பு தன்மை இதன் சிறப்பு.

தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் லிகோபீன் (antioxidant lycopene) அதிகமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். குறிப்பாக இதய நோய் மற்றும் கேன்சர் வராமல் தடுப்பதற்கு உதவும். ஆகவே தக்காளி சட்னி சுவையில் மட்டும் சிறந்த ஒன்றாக இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

- Advertisement -

தக்காளி சட்னி நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் சுலபமாகவும், ருசியாகவும் சமைக்கலாம். இந்த சட்னி தோசை, இட்லிக்கு மட்டும் இல்லாமல் உப்மா, வடை, போன்றவற்றிற்கும் தொட்டு சாப்பிடலாம்.

தக்காளி சட்னியை சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்யலாம் என்பதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் சமைத்துத்து பருக்கள்

தக்காளி சட்னி
Print
5 from 2 votes

தக்காளி சட்னி ரெசிபி

தக்காளி சட்னி அனைவரும் விறுவிறும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஆகும். இது தோசை,இட்லி, போன்ற காலை மற்றும் இரவு உணவுகளுக்கு மிக பொருத்தமானதாகும்.
Prep Time5 mins
Active Time10 mins
Course: தக்காளி சட்னி
Cuisine: Indian, இந்தியன்
Keyword: tomato chutney, தக்காளி சட்னி
Yield: 3
Calories: 34kcal

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவதையான பொருட்கள்:

 • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • 2 தக்காளி சிறியதாக இருந்தால் 4 ,
 • 4 சின்ன வெங்காயம்.
 • 6 பல் பூண்டு
 • 2 சிவப்பு மிளகாய்
 • உப்பு தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

 • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
 • ¼ டேபிள் ஸ்பூன் கடுகு
 • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • 1 சிவப்புமிளகாய்
 • பெருங்காய பொடி சிறிதளவு
 • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை

அரைப்பது:

 • முதலில் ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கிய சின்னவெங்காயம், 6 பல் பூண்டு, 2 நறுக்கிய தக்காளி, 2 சிவப்பு மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்ச நேரம் வேகவிடவும்.
 • தக்காளி ஜூஸ் முழுவதுமாக போகும்வரை வேகவிடவும். வெந்தபிறகு சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஆறவிடவும்.
 • பின்பு அதை ஒரு மிக்சியில் மிருதுவாகும் வரை அரைக்கவும்.

தாளிப்பது:

 • ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ¼ டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 சிவப்பு மிளகாய், சிறிதளவு பெருங்காயப்பொடி,மற்றும் கருவேப்பிலை இலை சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்.
 • பின்பு தாளித்ததில் முதலில் அரைத்த தக்காளி சட்னியை சேர்த்து கலந்து விடவும்.
 • இப்பொழுது சுவையான தக்காளி சட்னி தயார்.

Nutrition

Sodium: 4mg | Calcium: 1mg | Vitamin C: 16mg | Vitamin A: 7IU | Fiber: 3g | Potassium: 2mg | Calories: 34kcal | Fat: 3g | Protein: 1g | Carbohydrates: 1g | Iron: 1mg

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here