வீட்டில் நகைகள் புடவைகள் கிடுகிடுவென சேர பெண்கள் மறந்தும் கூட செய்ய கூடாத தவறுகள்!

- Advertisement -

பொதுவாக நகை புடவை என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் பெண்களிடம் தங்கத்திற்கு எப்பொழுதும் ஒரு கூடுதல் மதிப்பு தான். தங்கத்தில் முதலீடு செய்தால் அவசரத்திற்கு உதவும் என்பார்கள். தங்கத்தை அணியவும், வாங்கவும் விரும்பாதவர்கள் ரொம்ப குறைவு. சிலரிடம் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். சிலருக்கோ எவ்வளவு முயன்று குண்டுமணி தங்கம் கூட வாங்க யோகம் இருக்காது. அடகு வைத்த நகையை மீட்க முடியாமல், மகளின் திருமணத்திற்கு நகை எடுக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் வீட்டில் இந்த எளிய பரிகாரம் செய்தால் வீட்டில் தங்கம் பெருகி கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

தங்க நகை மற்றும் நல்ல புடவை அணிய பெண்கள் அனைவருமே விரும்புகின்றனர். தங்க நகை அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தங்கம் எல்லோர் வீட்டிலும் எளிதில் தங்கிவிடுவதில்லை. தங்க நகை அதிகம் வீட்டில் சேரவும் அடகு வைத்த நகைகளை எளிதில் திருப்பவும் சில ஆன்மீக பரிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்றை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பெண்கள் செய்ய கூடாத‌ தவறுகள்

பெண்களைப் பொறுத்தவரை என்னதான் நகைகள், புடவைகள் என வீட்டில் வாங்கி குவித்து வைத்தாலும் அவர்களுக்கு போதும் என்ற மனமே வராது. இது இயற்கையாக பெண்களுக்கு உள்ள குணம் தான், நம்மளால் அவர்களை குறை சொல்ல இயலாது. இந்த புடவையும் நகையும் சேராமல் போவதற்கு பெண்கள் செய்யும் சில தவறுகளும் காரணம் தான். அது என்ன தவறுகள் என்பதனை பற்றி பார்க்கலாம். பொதுவாக பெண்கள் ஒரு விசேஷ வீட்டிற்கு செல்லும் பொழுது உடுத்தி செல்லும் புடவையை வீட்டிற்கு வந்தவுடன் மடித்து காய போடுவார்களே தவிர, துவைத்து போட மாட்டார்கள். இதுதான் புடவைகள் தங்காமல் போவதற்கு முதல் காரணம். இப்படி புடவையை துவைக்காமல் அப்படியே பீரோவில் வைத்தால் தோஷம் தான் வந்து சேரும். அதுமட்டுமல்லாமல் அந்த துணியும் தோஷமான துணியாக மாறி விடும். அதனால் எந்த துணையாக இருந்தாலும் அதை அலசி விட்டு தான் உடுத்த வேண்டும். பட்டுப் புடவையாக இருந்தால் புடவையின் ஓரத்தை தண்ணீரால் துடைத்து விட்டால் போதும்.

நகையை மஞ்சள் நீரில் கழுவ வேண்டும்

புடவை போல் தான் நாம் அணியும் நகையும் நாம் வந்தவுடன் அணிந்திருக்கும் நகையை கழட்டி அப்படியே பீரோவில் வைத்து விடுவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. நாம் அணிந்திருக்கும் நகையை மஞ்சள் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்து விட்டு பின்னர் தண்ணியை துடைத்து விட்டு தான் பீரோவில் வைக்க வேண்டும். இப்படி செய்தால்தான் நகைக்கு எந்த தோஷமும் வராமல் இருக்கும். இதே போல் தான் அடமானத்திற்கு சென்று வந்த நகையும் அடமானத்தில் இருந்து நாம் மீட்டு வந்தவுடன் அப்படியே எடுத்து பீரோவில் வைத்து விடக்கூடாது. இதனையும் உப்பு கலந்த நீர் அல்லது மஞ்சள் நீரில் கழுவி தான் வைக்க வேண்டும். ஏனென்றால் அடமானத்திற்கு சென்ற நகையானது தோஷத்தை தாங்கி இருக்கும். இதை நாம் அப்படியே வைத்து விடும் பொழுது தோஷமான நகையாக அது மாறிவிடும். அப்படிப்பட்ட நகைகள் நம்மிடம் தங்காமல் செல்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

நாம் வெளியில் செல்லும் பொழுது நம்மை பார்க்கும் அனைவருக்கும் ஒரே கண் இருப்பது இல்லை. அவர்களின் பார்வை வேறுபடுவதுண்டு. அந்தப் பார்வை நமது புடவை நகை மீது பட்டு பெரிய தோஷமாகவே மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் நம் பயன்படுத்திய நகை மற்றும் புடவையை அலசாமல் அப்படியே வைக்கும் பொழுது சுக்கிர பகவானின் அனுகிரகம் நமக்கு கிடைக்காமல் போய்விடும். நகை மற்றும் புடவை செய்வதற்கு சுக்கிர பகவானின் அருள் கண்டிப்பாக நமக்கு தேவை. சுக்கிர பகவானின் அருள் நமக்கு இல்லை என்றால் இதுபோன்ற பொருட்கள் நம்மிடம் தங்காமலே போய்விடும்.

-விளம்பரம்-

தங்கம் மற்றும் வெள்ளி இரண்டனையும் நாம் தனித்தனியாக தான் வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தங்க நகையை நாம் சந்தன பெட்டியில் தான் வைக்க வேண்டும். தங்க நகையை சந்தனபெட்டியில் வைக்கும் பொழுது ஸ்வர்ண ஆகர்ஷணம் என்பது அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி வைக்க முடியாதவர்கள் தங்கம் வைக்கும் பெட்டியில் பச்சை கற்பூரம் அல்லது பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளசி ஏதாவது ஒன்றை தங்கப்பொருளுடன் வைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் தங்க நகை சேர்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.