நாளை தீபாவளி பூஜை செய்ய நல்ல நேரம் மற்றும் வழிபாடு செய்யும் முறை!

- Advertisement -

தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12, 2023 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர்.

-விளம்பரம்-

தீபங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளி மக்களால் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இது மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் தீபத்தின் ஒளியை குறிக்கிறது. இந்த சந்தோஷமான நாளில் அனைவரும் புத்தம்புதிய ஆடை அணிந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த மகிழ்ச்சியான தீபாவளி நாள் அன்று நாம் வழிபாடு செய்ய வேண்டிய வேண்டிய நேரம் மற்றும் முறைகள் சில உள்ளன. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

கங்கா குளியல் செய்ய‌ வேண்டிய நேரம்

கிராமங்களை விட, நகர்ப்புற தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டும். இத்தினத்தில், தீபாவளி திருநாளன்று, ‘கங்கா ஸ்நானம்’ எனும் எண்ணெய் குளியலுக்கு பிறகே, புத்தாடை‌ அணிவது மற்றும் இறைவனை வணங்குவது வழக்கமாக உள்ளது. தீபாவளியன்று மட்டும், நல்லெண்ணெயில் திருமகளும், நீரில் கங்கையும் வசிப்பதாக ஐதீகம். ஆகவே, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து நீராடினால், இருவருடைய அருளையும் பெறலாம் என்பது கருதப்படுகிறது. தீபாவளி தினத்தில் அதிகாலை அதாவது 3 முதல் 5.30 மணிக்குள் நாள் கங்கா ஸ்தானம் செய்ய வேண்டும்.

புதிய ஆடைகளை எப்போது அணிய வேண்டும்

தீபாவளி பண்டிகை என்றால் மக்களின் வறுமையைப் போக்கக்கூடிய முக்கிய அம்சமும் நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், இந்த தீபாவளி பண்டிகையின் போது மட்டும் தான், மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என்ற சாஸ்திரத்தின் படி, அனைவரும் புத்தாடை வாங்கி அணிவது வழக்கம். புதிய எண்ணங்கள், மற்றவருக்கு உதவக்கூடிய, பயன்படக்கூடிய நல்ல எண்ணங்கள் நம் மனதில் அணிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தீபாவளி அன்று புத்தாடை அணிகிறோம். அதனால் காலை 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் மஞ்சள் வைத்து இந்த புதிய துணியை நாம் அணிய வேண்டும்.

வழிபாடு செய்ய சரியான நேரம்

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் பூஜைகள் முழு பலனை அளிக்க வல்லது. இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! வருகின்ற தீபாவளியன்று அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த நேரத்தை விட்டால் 10.45 முதல் 11.45 மணிக்குள் வழிபாடு செய்யலாம். அல்லது ‌மாலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் லட்சுமி குபேர பூஜை மேற்கொள்ளலாம்.

-விளம்பரம்-

கேதார கௌரி விரதம் இருக்க சரியான நேரம்

தீர்க்க சுமங்கலியாக இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாப் பெண்களின் பிரார்த்தனையும் ஆசையும். அப்படியொரு ஆசியையும் அருளையும் தருகிற விரதமாகத் திகழ்வதுதான் கேதார கெளரி விரதம். நவம்பர் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.00 மணிக்கு மேல் அமாவாசை திதி பிறக்கிறது. ஆகவே, தீபாவளி நாளிலேயே, மாலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் கலசம் நிறுத்திவைத்து, விரதத்தை மேற்கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : லஷ்மி தேவியின் அருள் கிடைக்க தீபாவளி பண்டிகைக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து விடுங்கள்!