18 ஆண்டுகளுக்குப் பிறகு சனி நட்சத்திரத்தில் நுழையும் ராகுவால் இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்

- Advertisement -

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கென தனி சொந்த ராசிகள் கிடையாது.

-விளம்பரம்-

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். இவரின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

ரிஷபம்

ராகு உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். தேவையற்ற செலவுகள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த காலகட்டத்தில், உங்கள் பணி நடை மேம்படும். தவிர, இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றிலும் லாபம் பெறலாம். இந்த காலகட்டத்தில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணையின் அன்பு அதிகரிக்கும்.

மகரம்

புதிய நம்பிக்கையோடு உங்களுடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும், உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கும் நல்ல காலம் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் அல்லது ஏதேனும் ஒரு சொத்து வாங்கலாம். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

இந்த காலத்தில் தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய கடன் சிக்கல்கள் உங்களுக்கு முடிவடையும். மேலும் ஒருவர் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெறலாம். இந்த காலகட்டத்தில், உங்கள் திருமண வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும், உங்கள் வருமானத்திற்கான புதிய ஆதாரங்களை உருவாக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும், வாழ்வில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான அன்பும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கிருத்திகையில் புதன் பெயர்ச்சி இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!