- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
பொதுவாக கீரை வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரையின் புளிப்பு, மணம், மிளகாய் காரம் என இந்த புளிச்சக்கீரை தொக்கு உங்களுக்கு புது சுவை அனுபவத்தை தரும். இதை வாரத்திற்கு ஒரு முறை அரைச்சு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் அவசர நேரத்தில் உதவும். இதை இட்லி, தோசைக்கு தொட்டுக்கலாம்.
குழம்புக்கு துவையலாக தொட்டுக்கொள்ளலாம், நெய், நல்லெண்ணெய் விட்டு தாளித்து சாதமாகவும் செய்யலாம். இப்படி பல வகைகளில் உங்களுக்கு உதவும் புளிச்சக்கீரை தொக்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம். புளிச்சக்கீரை தோலில் ஏற்படும் அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. புளிச்சகீரையினை நன்றாக மை போன்று அரைத்து சொறி, சிரங்கு போன்ற காயங்களில் தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மேலும் இந்த புளிச்ச கீரையினை சாப்பிட்டு வருவதனால் முடி உதிர்வு பிரச்சனையை முற்றிலும் தவிர்க்கலாம். கீரை வகைகளில் புளிச்சக்கீரையை ஏராளமானோர் விரும்பி உண்ணாததற்கு அதில் உள்ள அதிகப்படியான புளிப்பு சுவை தான் காரணம். ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள முறையில் புளிச்சக்கீரையில் தொக்கு செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் நிச்சயம் பிடிக்கும்.
இதனையும் படியுங்கள் : புளிச்சக்கீரை வைத்து ஒரு தடவை இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் புளிச்சக்கீரையை தண்ணீரில் அலசி விட்டு அதில் உள்ள குச்சிகளை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விடாமல் கடுகு, வெந்தயம், வரமிளகாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கீரை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். அதேபோல் கீரையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
கீரை எண்ணையிலேயே சிறிது வெந்ததும் புளி கரைசல், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான புளிச்சக்கீரை தொக்கு தயார். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






