Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் தினை அல்வா ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது!!!

Advertisement

பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ஸ்வீட் சிறுதானியம் வைத்து செய்யப்படுவதால் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்வீட் ஆக இருக்கும். அல்வா என்று சொன்னால் யாருக்கு தான் நாக்கில் எச்சில் ஊறாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று அல்வா. ஆனால் இதை சில உடல்நல பிரச்சனைகளால் சிலர் ஒதுக்கி விடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு.

ஆம் இந்த பதிவில் சத்தான தினை வைத்து எவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த அல்வா செய்வது என்று தான் நாம் பார்க்க இருக்கிறோம். தினை அரிசி ஒரு புன்செய் பயிராகும். இந்த அற்புதமான தினை அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அதோடு கோதுமையை விட தினையில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள தினை அரிசியில் அல்வா எப்படி தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

தினை அல்வா | Thinai Halwa Recipe In Tamil

Print Recipe
பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ஸ்வீட் சிறுதானியம் வைத்து செய்யப்படுவதால் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்வீட் ஆக இருக்கும். அல்வா என்று சொன்னால் யாருக்கு தான் நாக்கில் எச்சில் ஊறாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று அல்வா. ஆனால் இதை சில உடல்நல பிரச்சனைகளால் சிலர் ஒதுக்கி
Advertisement
விடுவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சத்தான தினை வைத்து எவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த அல்வா செய்வது என்று தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Thinai Halwa
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 156

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் தினை
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 10 முந்திரி
  • 10 பாதாம்
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 கப் கருப்பட்டி
  • 1/4 கப் நாட்டு சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

Instructions

  • முதலில் ஒரு காடாயை அடுப்பில் வைத்து திணை அரிசியை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்தது மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கருப்பட்டியை மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, பாதாம் சேர்த்து வறுத்து கொள்ளவும். பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள திணை மாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி பாகை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறவும். பின் சிறிது நேரம் கழித்து அதனுடன் நாட்டு சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் சிறிதளவு நெய் சேர்த்து அல்வா நன்கு திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை அல்வா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 156kcal | Carbohydrates: 6.9g | Protein: 12.8g | Fat: 4.3g | Sodium: 290mg | Potassium: 369mg | Fiber: 9g | Vitamin A: 53IU | Vitamin C: 128mg | Calcium: 41mg | Iron: 9.12mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான மற்றும் ஆரோக்கியமான தினை பாலக் புலாவ் வெறும் 20 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் சுவையான லஞ்ச் தயார்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

கருங்காலி மாலை அணிவதன் பலன்கள்

கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. சக்தி வாய்ந்த இந்த மாலையை பலர் அணிந்திருந்தாலும், சமீபத்தில் லோகேஷ்…

2 மணி நேரங்கள் ago

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு லட்டு பிடிக்குமா ? அப்படியானால் இனி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் லட்டு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன.…

9 மணி நேரங்கள் ago

சத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை ஒரு இப்படி செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2024!

மேஷம் கடினமான வேலை இருப்பதால் இன்று சட்டென கோபம் வரும். இன்று சில விசேஷ வேலைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.…

14 மணி நேரங்கள் ago

ஜூலை மாத ராசிபலன் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் பல சவால்களை எதிர் கொள்வீர்கள் மற்றும் கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு பல வழிகளில்…

1 நாள் ago

சுவையான மற்றும் சத்தான சேனைக்கிழங்கு தவா ரோஸ்ட் இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!!

கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான…

1 நாள் ago