Advertisement
சைவம்

சத்தான அதேசமயம் விரைவாக செய்யக்கூடிய தினை உப்புமா இப்படி செய்து பாருங்கள் உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!!

Advertisement

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது தினை அரிசி. சிறு தானியங்களில் தினை முக்கியமானது. ஆனால் எப்பொழுது வெள்ளை அரிசியின் பயன்பாடு அதிகரித்ததோ அன்றிலிருந்து தினை உள்ளிட்ட சிறுதானியங்களின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது.

தினை அரிசியில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. தினையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் தினை. சொல்லப்போனால் தினையை வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். தோசை, ஊத்தப்பம், புலாவ், உப்புமா என எது வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் பலர் அவற்றை சாப்பிட விரும்புவதில்லை. இப்போது தினை உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த தினை உப்புமா செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.

Advertisement

தினை உப்புமா | Thinai Upma Recipe In Tamil

Print Recipe
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம்
Advertisement
காண உள்ளோம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த தினை உப்புமா செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword Thinai Upma
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 3 People
Calories 331

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
    Advertisement

Ingredients

  • 1 கப் தினை‌
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 கேரட்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் தினை அரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.‌
  • பின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் பச்சை பட்டாணி, கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்‌ தேவையான அளவு தண்ணீர் ஊற்றி‌ அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள தினை அரிசியை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை உப்புமா தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 331kcal | Carbohydrates: 6.9g | Protein: 12.8g | Fat: 4.3g | Sodium: 85mg | Potassium: 195mg | Fiber: 9.9g | Vitamin A: 123IU | Vitamin C: 60mg | Calcium: 31mg | Iron: 25mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான மற்றும் ஆரோக்கியமான தினை பாலக் புலாவ் வெறும் 20 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் சுவையான லஞ்ச் தயார்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2024!

மேஷம் இன்று உங்கள் உடன்பிறப்புகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். உங்கள் இல்லற வாழ்வில்…

1 மணி நேரம் ago

கருங்காலி மாலை அணிவதன் பலன்கள்

கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. சக்தி வாய்ந்த இந்த மாலையை பலர் அணிந்திருந்தாலும், சமீபத்தில் லோகேஷ்…

11 மணி நேரங்கள் ago

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு லட்டு பிடிக்குமா ? அப்படியானால் இனி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் லட்டு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன.…

18 மணி நேரங்கள் ago

சத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை ஒரு இப்படி செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

21 மணி நேரங்கள் ago

ஜூலை மாத ராசிபலன் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் பல சவால்களை எதிர் கொள்வீர்கள் மற்றும் கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு பல வழிகளில்…

1 நாள் ago

சுவையான மற்றும் சத்தான சேனைக்கிழங்கு தவா ரோஸ்ட் இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!!

கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான…

2 நாட்கள் ago