மறந்தும் வீட்டின் பூஜை அறையில் இந்த பொருட்களை வைக்காதீங்க கஷ்டம் தான் அதிகரிக்கும்!!

- Advertisement -

அனைவரது வீட்டிலும் பூஜை அறை என்று ஒன்று இருக்கும். பூஜை அறை அவர்கள் வீட்டு வசதிக்கேற்ப சிறிதாகவும், பெரியதாகவும் இருக்கும். பெரியதாக இருந்தால் கடவுளை வைத்து தாராளமாக வழிபடுவார்கள். ஆனால் பூஜை அறையை அமைக்கும் முன்னர் சில வாஸ்து சாஸ்திரங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

-விளம்பரம்-

வீட்டிலேயே பூஜை அறை தான் மிகவும் சக்தி வாய்ந்த இடம். இந்த இடத்தை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் வீட்டின் பூஜை அறையில் சரியான பொருட்களை வைத்திருக்க வேண்டும். தவறான மற்றும் வைக்கக்கூடாத பொருட்களை பூஜை அறையில் வைத்தால், அதன் விளைவாக வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் அதிகம் சூழ்ந்திருக்கும். உங்களுக்கு வீட்டின் பூஜை அறையில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பது தெரியாதா? கீழே வாஸ்துப்படி எந்த பொருட்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

லெதர் பொருட்கள்

லெதர் பொருள்களால் ஆன எந்த பொருளையும் பூஜை அறையில் வைக்க கூடாது. ஏனென்றால் அது ஒரு உயிரினத்தின் தோலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு உயிரினத்தை அழித்து அதன் மூலம் செய்யப்பட்ட பொருளை பூஜையறையில் வைத்தால் நமக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்து தரும். எனவே லெதர் பெல்ட், லெதர் பர்ஸ் என‌ லெதரால் செய்யப்பட்ட எந்த பொருளையும் பூஜை அறையில் வைக்க கூடாது.

காலணிகள்

பொதுவாக காலணிகளை வீட்டினுள் எடுத்து வரக்கூடாது என்று சொல்வார்கள். நாம் பல இடங்களுக்கு சென்று வருவோம் கிருமிகள் வீட்டினுள் நம் காலணியால் நுழைந்து விடும். எனவே பூஜை அறையில் காலணிகளை கொண்டு வரக்கூடாது. அது மட்டுமல்லாமல் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டிற்கு பக்கத்தில் பூஜையறையை வைக்கக்கூடாது.

இறந்தவர்களின் புகைப்படங்கள்

பலர் வீடுகளில் பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. ஆனால் அப்படி செய்யக்கூடாது, பூஜை அறை என்பது புனிதமான ஒரு அறையாகும். அதில் நாம் இறந்தவர்களின் போட்டோவை வைத்து வழிபடுவது என்பது நமக்கு நாமே பிரச்சனையை கொண்டு வருவது போன்றது. இருந்தவர்களின் போட்டோக்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சி கெட்டு பல பிரச்சினைகள் உண்டாகும்.

-விளம்பரம்-

உடைந்த சிலைகள்

பொதுவாக பலரது வீட்டில் கண்ணாடியினாலான சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதனை நாம் கவனமாக கையாள வேண்டும், ஒருவேளை அது நம் கவன குறைச்சலால் உடைந்து விட்டால் அதனை திரும்பவும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது. அதனை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும்.

காய்ந்த பூக்கள்

சாமி புகைப்படத்திற்கு நாம் பூக்கள் அணிவித்து வழிபடுவது வழக்கமாகும். ஆனால் அப்பூ காய்ந்தவுடன் உடனே அதை நாம் அப்புறப்படுத்தி விட வேண்டும். காய்ந்த பூவை அப்படியே வைத்து விட்டோமானால் நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும், எனவே ஒவ்வொரு நாளும் பூவை மாற்றும் பழக்கத்தை நம்முள் நாம் கொண்டு வர வேண்டும்.