இந்த ஒரு பொருளை யார் கொடுத்தாலும் வாங்கவே வாங்காதீர்! வாங்கினால் தரித்திரம் பிடிக்கும்!

- Advertisement -

கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் அவசரத்திற்கு ஒருவரிடம் கடனாக எதாவது ஒரு பொருளை வாங்கி விடுகிறோம். இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை நாம் அறிவதில்லை. இதனை அசால்ட்டாக எடுத்துக்கொள்ளும்போது தான் இது பெரிய பிரச்சனை ஆகிறது.

-விளம்பரம்-

வீட்டில் எதற்கெடுத்தாலும் பிரச்சனை ஏற்படுகிறதா?? பணப்பிரச்சனை, மனக்கஷ்டம், நிம்மதியின்மை போன்றவைக்கு முக்கிய காரணம் சில பொருட்களை நாம் கடனாக வாங்குவதால் தானாம். இதனால் தான் வீட்டில் தரித்திரியம் ஏற்படுகிறதாம். எந்த பொருளை கடனாக வாங்க கூடாது என பார்க்கலாம்.

- Advertisement -

இரும்பு பொருட்கள்

சிலர் சனி பகவான் மிகவும் சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவர் என்றும் கருதுகின்றனர். அவரது கோபம் ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் திறன் கொண்டது என்பது ஐதீகம். அவரின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக இந்த நாளில் மக்கள் சில வேலைகளைச் செய்வதையோ அல்லது சில பொருட்களை வாங்குவதையோ மக்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக இரும்புப் பொருட்களை வாங்குவது கெட்டதாக கருதப்படுகிறது. எனவே இரும்பு தொடர்பான எந்த பொருளையும் வீட்டிற்கு கொண்டு வரவோ அல்லது வாங்கவோ வேண்டாம். இலவசமாகக் கொடுத்தால் கூட இரும்பு பொருட்களை வாங்காதீர்கள். ஏனெனில் இரும்புப் பொருட்களை வாங்கினால் சனிபகவான் எரிச்சலைவார் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக ஏழரை சனி நடப்பவர்கள் இரும்புப் பொருட்களை யாரிடமும் வாங்கக்கூடாது.

இந்த பொருட்களை யாரிடம் வாங்கதீர்

இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களான கத்தி, கத்தரிக்கோல், தோசை கல், கடப்பாரை, அரிவாள் போன்ற பொருட்களை யாரிடம் இருந்தும் தானமாக வாங்க கூடாது. இரும்பு பொருட்களும் சனிபகவானின் அம்சம் என்பதால் இதை தானமாக வாங்க கூடாது. இதை தானமாக வாங்குவதால் வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்கும்.

ஒருவேளை இந்த இரும்பு பொருட்களை யாரேனும் நமக்கு தானமாக அல்லது பரிசு பொருளாக கொடுத்தால் நம்மளால் வாங்காமல் தவிர்க்க முடியாது. அந்த சமயங்களில் அதனை நாம் வாங்கி பிறருக்கு தானமாக அளித்து விட்டால் அது நமக்கு நன்மை பயக்கும். எனவே இரும்பு பொருட்களை யாரிடமும் கடனாக பெறாதீர்கள் அல்லது தானமாக கூட வாங்காதீர்கள்.

-விளம்பரம்-