சளி பிடித்துக் கொண்டால் ஒருவர் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் வந்துவிடும். சளித்தொல்லை மிகவும் பெரிய தொல்லையாக கருதப்படும். மூச்சு விட சிரமப் படம் வேண்டும். இருமல் சேர்த்து வந்துவிடும் உடலில் ஆரோக்கியத்திற்கு அத்தனை துன்பங்களையும் இந்த சளி பிரச்சனை கொடுக்கும்.தலைவலி மூக்கடைப்பு மூச்சு விட முடியாமல் இருப்பது இருமல் நாவறட்சி என அனைத்தும் இந்த சளி பிரச்சினையால் வரும். இப்படி இந்த சளி பிரச்சனை இருந்து விடுவதற்கு மிகவும் எளிமையான ஒரு மூலிகையில் சூப் செய்து சாப்பிட இருக்கிறோம்.
தூதுவளை மூலிகை நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை கிராமப்புறங்களில் என்றால் வீட்டு வேலிகளில் கிடைக்கும் இதுவே நகர்ப்புறங்கள் என்றால் கீரை கடைகளில் வாங்கிவிடலாம். அப்படி என்ன மூலிகை பற்றி சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா ?அதுதான் முட்களோடு கூடிய தூதுவளை. இந்த தூதுவளைக்கு அநேக நன்மைகள் உண்டு இந்த தூதுவளை குணப்படுத்தும் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் சளி பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும். வறட்டு இருமலை குறைக்கும். ஜீரணத்தை தூண்டும். இந்த தூதுவளையை வெறும் நெய்யில் வதக்கி சாப்பிட்டாலே சளி பிரச்சனைகளும், வறட்டு இருமல் வாயு பிரச்சனைகள் நீங்கிவிடும்.
தூதுவளையில் நாம் தூதுவளை ரசம் , தூதுவளை துவையல் சாப்பிட்டு இருப்போம். இப்பொழுது நாம் தூதுவளையை சூப் செய்து சாப்பிட இருக்கிறோம் இந்த தூதுவளை சூப்பை செய்து உண்டு சளிப் பிரச்சினைகளில் இருந்தும், நாள்பட்ட நெஞ்சு சளியில் இருந்தும், வறட்டு இருமலில் இருந்தும் விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம். இந்த தூதுவளை ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தூதுவளை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தூதுவளை சூப் | Thoothuvalai soup Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கைப்பிடி தூதுவளை இலைகள்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 6 பல் பூண்டு
- 2 வெங்காயம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் தனியாத் தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 1/2 ஸ்பூன் சோளமாவு
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மிளகு, சீரகம் வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகு , சீரகம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிஅதில் பொடியாகநறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாகவதக்க வேண்டும்.
- பிறகு தூதுவளையை சேர்த்து வதக்கி துண்டு துண்டாக நறுக்கி அல்லது அரைத்தும் சேர்க்கலாம்.
- பின் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் பொடிகளை சேர்த்து தனியாத்தூள், உப்பு போட்டு கிளறி விடவும்.பிறகு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
- நன்கு கொதித்து வந்ததும் சோளமாவை நீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கும் சூப்பில் கலந்து கிளறி விடவும்.
- இப்போதுசூப் கெட்டியாக ஆரம்பிக்கும் போது ருசி பார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான ஆரோக்கியமிக்கதூதுவளை சூப் தயார்.