Home சைவம் தக்காளி மிளகாய் பூரியை ஒரு முறை இப்படி செய்து ருசித்து விட்டால் போதும்! பிறகு...

தக்காளி மிளகாய் பூரியை ஒரு முறை இப்படி செய்து ருசித்து விட்டால் போதும்! பிறகு நம்ம வீட்டில் செய்யுற சாதாரண பூரியை தொடக்கூட மாட்டீங்க!

காலை உணவாக நாம் இட்லி, தோசை சப்பாத்தி பொங்கல் என பலவிதமான உணவுகள் செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்ற ஒரு காலை உணவு தான் இந்த பூரி உப்பி வருவதனால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த பூரியோடு உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவதற்கு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

-விளம்பரம்-

சாப்பிடாத குழந்தைகளும் கூட இந்த பூரியை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அனைவருடைய ஃபேவரட் ஆன ஒரு சிற்றுண்டி என்றே சொல்லலாம். என்னதான் நாம் கோதுமை மாவில் வெறும் பூரி செய்தாலும் இப்பொழுதெல்லாம் சோலா பூரி மசாலா பூரி ஸ்டஃப்டு பூரி நிறைய வெரைட்டிஸ் வந்திருக்கு.

அந்த வகையில நல்லா புளிப்பா தக்காளி வச்சு செய்யக்கூடிய ஒரு தக்காளி மிளகாய் பூரி தான் இப்ப நம்ம செய்ய போறோம். இந்த தக்காளி மிளகாய் பூரி கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும். காரசாரமாக சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு இந்த தக்காளி மிளகாய் பூரி மிகவும் பிடித்தமான ஒன்றாக எப்பொழுதும் ஒரே மாதிரியாக பூரி செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால் ஒருமுறை இந்த தக்காளி மிளகாய் பொடியை செய்து பாருங்கள் சுவை அற்புதமாக வாங்க இப்போ இந்த தக்காளி மிளகாய் பூரி எளிமையான முறையில் சூப்பரா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 2 votes

தக்காளி மிளகாய் பூரி | Tomato Chilli Poori Recipe In Tamil

சாப்பிடாத குழந்தைகளும் கூட இந்த பூரியை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அனைவருடையஃபேவரட் ஆன ஒரு சிற்றுண்டி என்றே சொல்லலாம். என்னதான் நாம் கோதுமை மாவில் வெறும் பூரிசெய்தாலும் இப்பொழுதெல்லாம் சோலா பூரி மசாலா பூரி ஸ்டஃப்டு பூரி நிறைய வெரைட்டிஸ் வந்திருக்கு. காரசாரமாக சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு இந்த தக்காளி மிளகாய் பூரி மிகவும் பிடித்தமான ஒன்றாகஎப்பொழுதும் ஒரே மாதிரியாக பூரி செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால் ஒருமுறை இந்த தக்காளி மிளகாய் பொடியை செய்து பாருங்கள் சுவை அற்புதமாக வாங்க இப்போ இந்த தக்காளி மிளகாய் பூரி எளிமையான முறையில் சூப்பரா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Tomato Chilli Poori
Yield: 4
Calories: 230kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 கப் கோதுமை மாவு
  • 4 தக்காளி
  • 4 மிளகாய் வத்தல்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் தக்காளியை போட்டு ஒரு பத்து நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும்.
     
  • தக்காளி வெந்தவுடன் அதன் தோலை நீக்கிவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் மிளகாயையும்15 நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் சர்க்கரை தக்காளி விழுது மிளகாய் விழுது நெய் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பொதுவாக பூரிக்குமாவு பிசைந்த உடனேயே பூரி போட வேண்டும் ஊற வைக்க தேவையில்லை.
     
  • ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி உங்களுக்கு தேவையான வடிவத்தில் மாவை தேய்த்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை போட்டு எடுத்தால் சுட சுட தக்காளி மிளகாய் பூரிதயார்.
  • நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பூரி மிகவும் பிடித்தவர்களுக்கு இதனை செய்து கொடுத்து அசத்துங்கள்

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 16g | Sodium: 37mg | Potassium: 150mg

இதையும் படியுங்கள் : புஸ்சு புஸ்சுனு பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!