காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை கொண்டு செய்யும் உப்புமா என்று பயப்பட வேண்டாம். அவல் கொண்டு செய்யும் உப்புமா. அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் தக்காளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா.
இது மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அவல் உப்புமா போஹா உப்மா என்றும் அழைக்கப்படுகிறது. போஹா உப்மா செய்முறை உண்மையில் போஹாவுடன் செய்யப்பட்ட தென்னிந்திய உப்மாவின் மாறுபாடு ஆகும். இது உங்கள் உடல் எடையை குறைத்து, உங்களை ஸ்லிமாக்க உதவும். காலை வேளையில் 15 நிமிடங்களில் காலை உணவு செய்ய வேண்டுமெனில், அதற்கு அவல் உப்புமா சரியானதாக இருக்கும்.
ஆம், அவல் உப்புமா செய்வது மிகவும் எளிது மற்றும் ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட. சொன்னால் நம்பமாட்டீர்கள், இது மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். நம்பவில்லையெனில், செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சரி, அதனை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தக்காளி அவல் உப்புமா | Tomato Flattened Rice Upma Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 100 கி அவல்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 துண்டு இஞ்சி
- 4 பல் பூண்டு
- 1 பச்சை மிளகாய்
- கறிவேப்பில்லை சிறிது
- மல்லி இலை சிறிது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையானஅளவு
- 1 கரண்டி கடுகு
- 1 கரண்டி உளுந்து
- 1 கரண்டி கடலைப் பருப்பு
- 1/4 ஸ்பூன் கரம் மசாலா
- 1/4 ஸ்பூன் மிளகாய் தூள்
- மஞ்சள் தூள் சிறிது
செய்முறை
- முதலில் அவுலை 10நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊர வைத்துக் கொள்ளவும்.பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- பின் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் கரம்மசாலா, மிளகாய்தூள், உப்பு, மஞ்சதூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- அனைத்தும் வதங்கியிய பின் ஊறவைத்த அவுலை சேர்த்து கிளறி விட்டு 5 நிமிடம் நன்கு வேக விடவும். பின்பு மல்லிஇலை சேர்த்து பரிமாறவும்.
- சுவையான காரமான தக்காளி அவல் உப்புமா தயார்.